1,000 ஆண்டுகளுக்கு முன்பு தை திருநாளில்

1,000 ஆண்டுகளுக்கு முன்பு தை திரு நாளில் காவிரியில் நீராடிய ராஜேந்திர சோழன்
☺☺☺☺☺☺☺
வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தகவல்
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺ ☺ ☺☺குள. சண்முகசுந்தரம்☺☺☺
____________________________
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
தை பொங்கல் தினத்தில்
ராஜேந்திர சோழன் தன்
பரிவாரங்களோடு காவிரியில்
புனித நீராடியதற்கான ஆதார
கல்வெட்டு கிடைத்திருப்பதாக
வரலாற்று ஆய்வாளர் குடவாயில்
பாலசுப்ரமணியன்
தெரிவிக்கிறார்.
☺☺☺
அவர் 'தி இந்து'விடம் பகிர்ந்து கொண்டார்:
☺☺☺☺
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு
அருகில் உள்ளது பெலகோலா.
இங்கு ராஜேந்திர சோழனால்
கட்டப்பட்ட சிவலாயம் ஒன்று
உள்ளது. காவிரியை தழுவிச்
செல்லும் இந்த தீர்த்தத் துறைக்கு
வலம்புரி தீர்த்தம் என்று பெயர்.
இந்த கோயிலுக்கு தினமும்
சிறப்பு பூஜைகள் நடப்பதற்கு
ராஜேந்திர சோழன்
நிவந்தங்களை (மானியங்களை)
அளித்துள்ளார்.
☺☺☺☺☺
டிசம்பர் 23-ம் தேதி
--------------–---------------------------
இப்பகுதியை தனது
ஆளுமைக்குள் வைத்திருந்த
ராஜேந்திரன், இப்பகுதியின்
மகாதண்ட நாயகனாக பஞ்சவன்
மாராயன் என்ற பட்டத்துடன்
விளங்கி இருக்கிறார். ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு தை முதல்
நாளானது டிசம்பர் 23-ம் தேதியே
வந்திருக்கிறது. மேலை
நாட்டவர்களின் வானியல்
அடிப்படை நாள்காட்டிகளில்
(காலண்டர் முறை) தவறுகள்
இருந்ததே இதற்குக் காரணம்.
☺☺☺☺☺☺☺☺
-------------
1582-ம் ஆண்டில்தான் மாதத்தின் நாட்களை கோள்களின் அடிப்படையில் கணக்கிட்டு சரி செய்தார்கள்.
-----–--
☺☺☺
இதன்படி, சக வருடம் 934 பரிதாபி
ஆண்டு உத்தராயண
சங்கராந்தியான தை முதல்
நாளில் ராஜேந்திர சோழன் தனது
பரிவாரங்களோடு பேலகோலா
வலம்புரி தீர்த்தத்தில் புனித
நீராடியதாக கல்வெட்டு தகவல்
சொல்கிறது.
☺☺☺☺☺☺
------------------
இதற்கு சரியான ஆங்கில ஆண்டு
குறிப்பானது கி.பி. 1012 டிசம்பர்
மாதம் 23-ம் தேதி
செவ்வாய்கிழமை என்பதாகும்.
☺☺☺☺☺☺
--------------
இதே போல் வங்க தேசத்தை
வென்ற ராஜேந்திர சோழன், எந்த
இடத்தில் எந்த இடத்தில் இருந்து
கங்கை நீரை எடுத்து தமிழகம்
வந்தார் என்பதற்கான ஆதாரமும்
தெரிய வந்துள்ளது.
☺☺☺☺☺☺☺☺☺
-------------------------
மூலகங்கை, பாகீரதி
என்றெல்லாம் சொல்லப்படும்
கங்கை நதியிலிருந்து சரஸ்வதி,
யமுனை நதிகள் இணையும்
புனிதத் துறைக்கு திரிபேணி
(திரிவேணி சங்கமம்) என்று
பெயர். இங்கிருந்துதான் சோழப்
படைகள் கங்கை நீரை எடுத்து
வந்திருக்கின்றன என்பதற்கான
சான்றுகளும்
கிடைத்திருக்கின்றன" என்றார்
☺☺😊😊😊💐💐💐💐🎂👌👌👍
'தி இந்து' வெள்ளிக்கிழமை, ஜனவரி 13, 2016.
👍👍👍👌👌👌👌🎂🎂🎂🎂🎂🎂