தளறும் தன்மானம்

போண்தா கோழி எனப்படும் BROILER கோழிகள் நமது “நாட்டுக்கோழிகள்” மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவும் நமது சேவல் சண்டையை தடை செய்த பிறகு ஏறப்பட்டிறுக்குமோ என்பதை ஆராய 19TH LIVE STOCK CENSUS ல் சென்று பார்க்க, 2007 ற்கும் 2012 ற்கும் ஓப்பிடு செய்ய பெருமளவு வித்தியாசம் கீழ் நோக்கி செல்கின்றது.

இன்று சாராயம்(LIQUOR), பீர்(BEER), வெய்ன்(WINE) போன்ற மதுபானங்கள் சத்துக்கள் எதுவும் இல்லாமல் இருப்பதும் நமது சிதோசன நிலைக்கு ஏற்க குடியதல்ல. அதே தெழுவு எனப்படும் “கள்” போதை ஊட்ட கூடியது எனினும் சத்துகளும் தமிழக சிதோசன நிலைக்கும் ஏற்கக் குடியது. தமிழக அரசாங்கம் கள்ளினை தடை செய்த பிறகு; தமிழக மரம் எனும் “பனை மரம்” இன்று கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவாக உள்ளது. இருப்பினும் இதையே தாய்ப்பாலை விட சத்தானது என கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் நமது காளை, பசு மாடுகளுக்கும் இதே நிலைமை என்று சிந்திக்க தொடங்கியவுடன் பசுகளுக்கும் காளைகளுக்கும் உள்ள ஜனத்தொகையை பர்க்க, இதில் கண்ட ஆச்சர்யமும் ஐயமும் என்னவென்றால்; மேனாட்டு வகைகளும் நமது இந்திய வகைகளும் மாடுகளை ஒப்பீடு செய்தால் “மேனாட்டு வகைகள் அதிகரிக்க; நமது நாட்டு மாடு இனங்கள் குறைகின்றன”. அதிலும் மேனாட்டு வகைகள் 20.18% மற்றும் இந்திய வகைகளும் -8.94% என்ற புள்ளி சதவீதம் வருகிறது. எனினும் ஜல்லிகட்டு மஞ்சுவிரட்டு போன்ற நமது கலைகளை தொடராமல் போயிவிட்டோம் என்றால் கண்டிப்பாக சேவக்கோழிகளின் மற்றும் பனை மரங்களின் நிலைமை தான். மேனாட்டு பசுகளுள் குறிப்பிடதக்க JERSY , HF எனப்படும் Holstein Friesians போன்றவை தனது இரண்டாவது தலைமுறையிற்கு மேல் இனப்பெருக்கம் செய்ய முடியாது. அந்த சூழ்நிலையில் நாம் பன்னாட்டு நிறுவனத்திடம் கண்டிப்பாக கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இதன் மூலம் தான் BIO-WAR தொடங்கும் என்றும் கூறலாம்.
இதனை உற்று நோக்கி நமது தமிழ் மக்கள் முக்கியமாக என்னை போன்ற இளைஞனர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்றவற்றை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நமது தமிழ் கலைகளை போற்றி, தமிழனின் தன்மானத்தை வேண்டும்..

ஜல்லிக்கட்டு
கலாச்சாரம் மற்றும் விளையாட்டு
“தமிழ் மொழியானது 3000 வருடங்கள் பழைமையானது என்று தொல்லியல்த்துறையால் நிருபிக்கப்பட்டுள்ளது”
தமிழர் நாகரிகம் பழங்காலக்கட்டங்களில் இருந்திருக்கிறது என்பது நம்மால் கூறமுடிகிறது. ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு எனப்படும் விளையாட்டானது ஒரு காளையின் திமிலை தழுவி அதனை அடக்க வேண்டும். இந்த விளையாட்டும் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாரம்பரிய விளையாட்டு என்றே கூறலாம். ஜல்லிக்கட்டு அறுவடை திருநாளான பொங்கலை தொடர்ந்து நடத்தப்படுகிறது. ஒவ்வொரு காளைகளும் வருடந்தோறும் ஒரு நாள் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டிற்காக பயிற்சியளிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு பற்றி சித்திரிக்கும் நானயம்
ஏறுதழுவுதல் பெருமையும் கம்பீரமும்
காளைகளின் உரிமையாளர்களைப் பொறுத்து, காளை அடக்குபவருக்கு மலிவான பொருளிலிருந்து ஆபரணம் வரை பரிசுகள் வழங்கப்படுகிறது. கிடைக்கும் பெயரும் புகழும் எப்பொழுதும் மிகப்பெரிய சந்தோஷத்தை தரக்கூடியது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெற்றிபெறும் மாடுபிடி வீரனுக்கு காளை உரிமையாளரின் மகளை மணம்முடிப்பதும், பல ஏக்கர் நிலங்களை பரிசாக வழங்கும் பழக்கமும் இருந்தது. முன் காலனித்துவ காலத்திலும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் காலத்திலும் ஏறுதழுவிய வீரருக்கு பொன் குவியல்கள், அரசியை மணம்முடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இன்றைய காலங்களில் பெருமையும் வெகுமதியும் சற்று குறைவாக வழங்கப்படுகிறது. இந்த விளையாட்டிற்கு இன்றைய காலங்களில் பல இடையூறுகள் தான் காரணம் என சொல்ல முடிகிறது. இந்த சமுதாயத்தின் பரிமான வளர்ச்சியில் சில காரணிகள் வேளான்மை நிலங்களை அரசாங்கத்தால் விவசாய நிலங்களை பறிமுதல் செய்வது, மக்கள் இடம் பெயர்தல் போன்ற காரணங்கள் தான்.

பல மக்களின் கருத்தானது, மாடுபிடி வீரர் தனிச்சியாக ஏறுதழுவி வெற்றி பெறுவர். ஆனால் இன்றைய சில நகரத்து இளைஞர்களின் கருத்து “ஏறுதழுவி கிடைக்கும் பரிசுகளும் பணமும் அரசாங்கம் விபத்து நிகழ்ந்தால் தரும் பரிசினை விட குறைவு தான்” என்று தவறாக எண்ணுகின்றனர். உண்மையில் ஏறுதழுவுதல் என்பது மாடுபிடி வீரர், மாடுகளின் உரிமையாளர் மற்றும் பயிற்றுனர்களின் உணர்வு தான். இன்றைய நாள் வரை ஜல்லிக்கட்டு மாடுகள் களத்தில் இறந்தது கிடையாது.
காளைகளின் உரிமையாளர் மற்றும் பயிற்றுனர்கள் இன்று வரை காளையினை, முடிந்தவரை மற்றவர்களால் அடக்க முடியாத வகையில் தான் பயிற்சியளிக்கப்படுகிறது. அதுபோல தான் வீரர்களும் மாடுகளை அடக்கும் வகையில் பயிற்சி எடுக்கின்றனர்.
ஜல்லிக்கடுக்கு அனுபப்படும் காளைகள் அனைத்தும் அந்த கிராமத்தின் பெரியோர்களால் மூன்று மாதாமான கன்றுகுட்டிகளை உடல் மற்றும் நடத்தையினை பரிசோதித்த பிறகே தேர்வு செய்வார்கள். அவர்கள் மாடின் தோற்றம், திமில், கொம்புகள் மற்றும் உடற்கூறியல் விகிதங்கள் போன்றவற்றை பார்த்து தேர்வு செய்வர். ஜல்லிக்கட்டு மாடுகள் வேறு எந்த செயல்களுக்கும் பயன்படுத்துவதில்லை.

இன்றைய காலங்களில் ஜல்லிக்கட்டிற்க்கு பயன்படுத்தப்படும் மாடுகள்.
• புலிக்குளம் ஜல்லிக்கட்டு மாடு
• காங்கயேம் மாடு
• உம்பளசேரி மொட்டை மாடு
• மலை மாடு (தேனி மாவட்டங்களில்)

வகைகள்&முறை
வாடி வாசல்-----வாடி வாசலில் இருந்து சீறும் களையை மாடுபிடி வீரர் குறிப்பிட்ட தூரத்திற்கோ நேரத்திற்குள்ளோ திமிலேறி காளையை அடக்குதல் வேண்டும்
வட மாடு விரட்டு-----காளை 15ம் நீளமுள்ள கயிற்றில் மாடின் கழுத்தில் கட்டிய பரிசினை குறிப்பிட்ட நேரத்தில் மாடுபிடி வீரர் ஒரு காளையை அடக்க முயல வேண்டும்.
வெளி விரட்டு (அ) மஞ்சு விரட்டு-----காளைகளை வெட்ட வெளியில் சற்று தொலைவிற்கு ஓடவிட்டு அடக்குவது.

நமது ஜல்லிக்கட்டை பற்றி தவறான கருத்து ஏன் பேசப்படுகிறது?

ஏன் ஜல்லிக்கட்டினை தமிழர்கள் தங்கள் உணர்வுப்புர்வமான எண்ணுகிறார்கள்?

நமது இந்தியர்களே, தமிழ் மிகவும் தொன்மையான மொழியென்று ஒரு உணர்வு கூட கிடையாது. இதுவே ஜல்லிக்கட்டு பற்றி தவறான கருத்துகளை கூறுவதற்கு மிக முக்கியமான காரணம் எனலாம்.
ஜல்லிக்கட்டு பற்றி தவறான கருத்துகளை கூறுபவர்கள், “சங்க கால புராணங்கள் கூறும் விளையாட்டு கலையினை, தாய் நாட்டவரே அழித்து கொண்டிருக்கின்றனர்” என்பதே உண்மை. தவறான கருத்துக்களை கொண்ட வாதங்களை மற்றும் விவாதித்து இந்திய தலைமை நீதிமன்றம் ஜல்லிக்கட்டு ரேக்ளா தமிழ்நாட்டில் தடை செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டாகும். பலருக்கு, ஜல்லிக்கட்டு இதை ஒரு குருதிக்கள விளையாட்டாக கருதுகின்றனர். கோடிக்கணக்கான தமிழர்கள் ஜல்லிக்கட்டை தங்கள் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் சுயமரியாதையாக எண்ணுகின்றார்கள். நான் கொங்கு மண்டலத்தை சார்ந்தவன். எங்கள் பகுதிகளில் காங்கயேம் மாடுகள் தான் ஜல்லிக்கட்டு காளையாக பல காலமாக இருக்கிறது. அதிலும் எங்கள் பகுதிகளில் திருச்செங்கோடு வகை இருந்தது என்றும் எங்கள் பகுதியினர் கூறுகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் முக்கிய இடங்களான ஆவணிபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்கானிப்பாளர் மற்றும் மாவட்ட நீதிபதி முன்னிலையிலும் கண்கானிப்பிலும் நடக்கும். இது தவிர சக்குடி, சேலம் அருகே அரவங்காடு போன்ற இடங்களிலும் நடக்கின்றது.
தமிழர்களின் நன்றி தெரிவிக்கும் விழாவான பொங்கல் பெருவிழா, தமிழ் மாதமான “தை” மாதத்தில் நடைபெறும். தமிழகத்தில் உழவர்களுக்கு முக்கியமான விழா. இந்த விழாவானது சூரியனை போற்றும் விழாவக பின்பற்ற படுகிறது. இதே சமயத்தில் தான் ஜல்லிக்கட்டும் மூன்று நாள் அறுவடைத் திருவிழாவாக பல கிராமங்களில் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் என்று நடக்கும்
ஆவணியபுரம்----தைப்பொங்கல்
பாலமேடு----மாட்டுப்பொங்கல்
அலங்காநல்லூர்----காணும் பொங்கல்

இணைப்பிரியா பந்தமும் பாசமும்

நகரத்து மக்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றியும் காளைகளுக்கும் மனிதருக்கும் இருக்கும் இணைப்பிரியா பந்தமும் பாசமும் தெரிவதில்லை. சமுதாயம் மாடுகளின் தன்மையும் மற்றும் அதன் பண்பையும் முற்றிலுமாக அனுமதித்து உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் சூற்றுச்சூழல் சங்கிலியினை (CHAIN OF ECO-SYSTEM), நன்று புரிந்து கொள்ளவேண்டும். கால்நடை வளர்ப்பு பண்ணையில் இருக்கும் ஒரு ஜல்லிக்கட்டு மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக பார்த்துக் கொள்வார்கள். மாடுகளின் தொழுவத்திற்கும் மாடின் உரிமையாளர் வீட்டிற்கும் உள்ள தொலை தூரம் எனினும், மாடுகள் அந்த உரிமையாளரை பார்க்கும் போதும் பந்தமும் பாசமும் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே அதிகமாக காணப்படுகிறது. உண்மையில் விலங்கு நல செயற்பாட்டுகள் ஜனநாயக நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் மிகவும் தேவையானது. ஒரு சமூக ஆர்வலர் பார்வையில் தாங்கள் ஒவ்வொருவரும் முன்வந்து தனது உரிமைகளை சமூக வளைதலங்கள் மூலம் பரவச்செய்ய வேண்டும். ஆனால் நமது தமிழர்கள் அதை செய்வதில்லை. நான் மட்டும் அல்லாது விலங்கின ஆர்வலர்களுக்கு இதைப்பற்றிய விவேகமான கருத்துகளை ஊடகங்களிலும் சமூக வளைதளங்களிலும் பரப்பவும் பதிவு செய்யப் படுகின்றனர். அரியாத விளையாட்டல்ல இது! PETA, AWBI போன்ற அமைப்புகள், அறியாமையால் ஸ்பேய்ன் (Spain)ல் நடக்கும் ‘Corrida de Toros’ எனப்படும் Bull Fight, நெப்பாலில் நடக்கும் கால்நடைகளை பலி கொடுக்கும் ‘Gadhimai Festival’, சீனாவில் நடக்கும் நாய்களை குண்டோடு பிடித்து கறியாக்கும் `Yulin Dog Meat Festival’, போன்ற விளையாட்டுகளை போல ஜல்லிக்கட்டு என்று, அதே முற்போக்குடன் சென்று தடை செய்ய எண்ணுகின்றனர். 2000 வருடம் தொன்மையான விளையாட்டை வீடியோக்களில் பார்ப்பதை வைத்து தடை செய்ய போராடுபவர்கள், ஒரு விளையாட்டு மற்றும் அல்லாமல் அதன் கலாச்சாரம் பண்பாடு மற்றும் மிக முக்கியமாக சமூக பொறுப்பையும் இழக்கின்றனர்.
ஒரு நாள், அதிகாரமும் நீதியும் முழுமையாக வரும் பொருட்டில், பல ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தவறான கருத்தினை கூறி இந்த வீர விளாயாட்டிற்கு தடைகூறுபவருக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுக்கப்போம் என்று எச்சரிக்கிறேன்.

கண்மூடித்தனமான குற்றச்சாட்டும் அதன் உண்மையும்

குற்றச்சாட்டு 1: அனைத்து மாடுகளும் பயிற்சியின் போது பசியால் வாடியும் மற்றும் கொடுமை படுத்துகின்றனர்!
உண்மை:
இது மிகவும் கேலிக்குரிய கூற்று. ஒரு கன்று முன்னதாகவே விளையாட்டு காளை. அன்றைய காலம் முதலே நிகர்நிலையாய், பசுவானது தாய்ப்பாலும், பருப்பு வகைகள் மற்றும் கீரைகள் செலுத்தப்படுகிறது.
• திறந்த வெளிகளில் மாடுகளுக்கு ஓடவும் குதிக்கவும் கற்றுத்தரப்படுவதால் அதன் இதயம் பதப்படுத்தப்படுகிறது.
• கொரங்கட்டிலும், வயல் வரப்பினில் பயிற்சியளிக்கப்படுவதால், அதன் வலிமையை அதிகரிக்கிறது.
• தடையை சமாலிக்க நீச்சலும் கற்றுத்தரப்படுகிறது.

“மேற்கண்ட எந்த குறிப்புகளிலும் துன்புறுத்தும் செயல் இடம்பெறவில்லை”

குற்றச்சாட்டு 2: மாடுகளுக்கு வேண்டா வெறுப்பாக நீச்சல் பழக்குகின்றனர்.
உண்மை:
காளைகளுக்கு நீந்தும் தன்மை உண்டு. சான்றாக ஆற்றங்கரையில் இருந்து மணலினை மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லும் பழக்கம் இன்றும் உண்டு. இதற்கு காங்கயம் காளை பயன்படுத்தப் படுகிறது. இதில் மாடு கழுத்து வரை தண்ணீர் இருந்தால் மணல் சுமையுடன் கரை கடக்கும் தன்மையும் மாடுகளுக்கு உண்டு. பிறகு, எவ்வாறு “வேண்டா வெறுப்பாக நிச்சல் பழக்கின்றீர்” என முடியும்.

குற்றச்சாட்டு 3: பல மாடுகளுக்கு சாராயம் வழங்கப்படுகிறது.
உண்மை:
இது பரவலாக பொதுமைப்படுத்தப் பட்ட கூற்றாக அமைந்திருக்கிறது. மாநில ஜல்லிக்கட்டு விதி 2009 கீழ், அனைத்து மாடுகளும் விளையாடிற்கு முன்பும் முடிந்த (POST AND PRE TEST) பிறகும் அரசின் சான்று பெற்ற கால்நடை மருத்துவரால் மருத்துவ பரிசோதனைக்கு அனுபப்படுகிறது.

குற்றச்சாட்டு 4: மாடுகள் பல பங்குபெறுவதற்கு முன் துன்புறுத்தப்படுகிறது.
உண்மை:
இது நியாமற்ற கூற்றாகும். தமிழகம் முழுவதும் வருடம் தவறாமல் ஆயிரக்கணக்கான மாடுகள் பங்குபெறுது, இதில் 95% சதவீதம் துன்புறுத்தமுடியாது. மாநில ஜல்லிக்கட்டு விதி 2009 கீழ், இது போன்ற குற்றங்களை தடுக்க தான், அதகாரிகளின் மேற்ப்பார்வையில் தான் வாடி வாசலில் இருந்து மாடுகளை அனுப்பப்படுகிறது.
வீடியோ கோப்புகள் மாவட்ட ஆட்சியருக்கும் நீதிமன்றத்திற்கு ஒப்படைத்தல் வேண்டும்.

குற்றச்சாட்டு 5 : மாடுகள் பல பங்குபெறுவதற்கு மாடினை அடக்கும் இடங்களில் துன்புறுத்தப்படுகிறது.
உண்மை:
விழாவின் அமைப்பாளர்களுக்கும் மாடினை அடக்கும் வீரர்களுக்கும் ஏறுதழுவுதலின் வீதிகள் நன்றாக தெரியும். ஒருவர் மட்டும் தான் காளையை அடக்க வேண்டும்; இதனை மீறி மற்றொருவர் அடக்க முயன்றால் கூட இருவரும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். வீரர்கள் அனைவருக்கும் சீருடைகள் இன்றைய ஜல்லிக்கட்டு விழாக்களில் வழங்கப்படுகிறது. உடல் அதிகம் வழுவு கொண்ட மாடுகளை அடக்கும் வீரனுக்கு தான் காயம் படுமே தவிர மாடுகளுக்கு காயமோ கொடுமையோ நடக்க வாய்ப்புகள் இல்லை. சங்க காலங்களில் இருந்தே வீரன் காயம்படலாமே தவிர காளைகளுக்கு காயம் படக்கூடாது. அவ்வாறு காயம்பட்டால் ஊராருக்கு ஆகாது போன்ற நம்பிக்கைகள் கடைபிடிக்கப் பட்டன இன்றும் கடைப்பிடிக்கப் படுகின்றன.

குற்றச்சாட்டு 6: ஜல்லிக்கட்டு ஒரு இரத்த விளையாட்டு.
உண்மை:
மலையேறுதல், பாறை தாவுதல், பைக் மற்றும் கார் ரேஸ் போன்ற விளையாட்டுகளை போன்றது தான் ஜல்லிக்கட்டு. ஆனால் உயிரிழப்பு மேற்க்கண்ட வீர விளையாட்டினை பார்க்கும் பொழுது காயத்திற்கும் உயிழிப்பிற்கும் வாய்ப்புகள் குறைவு தான். இன்றைய காலங்களில் CRICKET ம் உயிரிழப்பிற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
உயிரிழப்பு, காயங்கள், பலத்த காயம் போன்ற சம்பவங்கள் ஜல்லிக்கட்டில் நடக்கும். ஒவ்வொரு வீரனும் தனது உயிர்க்கு பொறுப்பு. ஒவ்வொரு வீரனும் மாடுகளைப் போல் “சாராயம் குடித்திருகிறார்களா?” மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கு பிறகு ஒவ்வொரு போட்டியாளரும் “நான் ஜல்லிக்கட்டு விதிகளுக்கு ஒப்பு கொண்டேன்”, என்று தன் ஒப்பம் செய்தல் வேண்டும்.
இத்தகு உயிரிழப்பு விதிகளை விதித்தாலும் மாடு பிடிக்கும் வீரர்கள் பங்கேற்ப்பதை நிறுத்தவில்லை. ஏனெனில் அது அவர்களின் தமிழன் என்ற உணர்வும், பெருமையும் அதிகம் இருக்கிறது.

குற்றச்சாட்டு 7: வாடிவாசலில் மாடுகள் அனைத்தும் துன்புறுத்தப் படுகிறது.
உண்மை:
வாடிவாசலில் மாடுகள் எதுவும் துன்புறுத்த முடியாது. எனெனில், விலங்குகள் நல ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தான் வாடி வாசலில் இருந்து களத்திற்கு முக்கனாங்கயிறை அறுப்பதன் மூலம் அனுப்பப் படுகிறது. அங்கு வீடியோ கேமராக்களால் பதிவு செய்யப்பட்டு கோப்புகளாக ஒவ்வொரு மாடுகளின் பரிசோதனை சான்றும், குறுந்தகடும் ஒப்படைப்பு செய்யப்படுகிறது.

குற்றச்சாட்டு 8: உயிர் பிரியும் என்று தெரிந்தே வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.
உண்மை:
ஜல்லிக்கட்டுக்கேன சட்டம் வரையறுக்கப் பட்டதற்குப் பிறகு, உயிரிழப்பு அதிகம் நடந்ததில்லை. இந்த விளையாட்டின் மூலம் “உயிர் பிரியும்” என்றால், சாகச விளையாட்டுகள் பல இன்றும் நடக்க வாய்ப்பில்லை. மேல குறியது போல் CRICKET ல் உயிரிழக்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜல்லிக்கட்டின் மீது ஒரு சட்டப்போர்
ஜனவரி 2008
• ஜல்லிக்கட்டில் உயிரிழந்த ஒருவரின் தகப்பனார் வழக்கினை தொடர உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டினை தடை செய்தது.
• தடை செய்ததை தொடர்ந்து, போராட்டங்கள் பல பகுதிகளில் நடந்தது. தமிழக அரசும் தடைக்கு மேல் முறையீடு செய்தது. அதற்கு சில வரையரையுடன் ஜல்லிக்கட்டினை நடத்த உச்சநீதி மன்றம் தடை நீக்கம் செய்தது.

5 அகஸ்ட் 2009
• சில வருடங்களுக்கு பிறகு, “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு தடைச் சட்டம்” வரைமுறைக்கு 2009ல் கொண்டுவரப்பட்டது.
• இதில் ஒவ்வொரு மாடுகளும் கால்நடை மருத்துவர்களால், விதிகளுடன் பதிவு செய்யப்பட வேண்டும்
• மாடுகள் விளையாட்டிற்கு முன்பு பின்பும் (POST AND PRE TEST) மருத்துவர்களால் பிரிசோதனை செய்யப்பட வேண்டும்.

2011
• மத்திய சுற்றுச்சூழல் துறையால் ஜல்லிக்கட்டுக்கு தடை வழங்கப்பட்டது.
• PETA எனப்படும் அமெரிக்க விலங்கின ஆர்வலர்கள், ஹேம மாலினி போன்ற பிரபலங்களை அணிதிரட்டி, சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இந்த விளையாட்டை தடை செய்ய கட்டாயப்படுத்தினர்.
• ஜெய்ராம் ரமேஷ், நிகழ்ச்சி விலங்குகளாக அறிவித்து, Section 22 of the Prevention of Cruelty to Animals Act, 1960 படி ஜல்லிக்கட்டை தடை செய்தது.
உண்மை
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், பாரம்பரிய கலாசாரம் மற்றும் விளையாட்டான ஜல்லிக்கட்டு, நாட்டு மாடுகளையும் நல்லரோக்கியத்துடன் இருக்க வழிவகுக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு பயன்படுதும் காளைகள் உழவுக்கு பயன்படுத்துவத்தில்லை. பாரம்பரிய கருத்துக்கள், மாடுபிடி வீர்ருக்கு காயம் ஏற்படலாம், ஆனால் காளைக்கு ஏற்ப்பட்டால் “தெய்வ குத்தம்” “ஊருக்கு ஆகாது” என பல கட்டுப்பாடுகள் உள்ளன.



ஜனவரி 2014
• ஜல்லிக்கட்டை PETA துன்புறுத்தும் விளையாட்டு என்றது.
• 2014 சனவரியில் PETA மற்றும் Animal Welfare Board இணைந்து விலங்குகளை பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.
• இதில் அவர்கள் காளைகளை அடித்தல், ஈட்டி வைத்து குத்தல், எலுமிச்சை சாறு பிழிதல், சாரயம் உட்கொள்ள செய்தல் போன்ற துன்புறுத்தும் செயல்கள் வாடி வாசலுக்குள் நடத்தப்படுகிறது என்று முட்டாள்தனமாக கூறப்பட்டது.
• PETA ஜல்லிக்கட்டு துன்புறுத்தும் விளையாட்டு என்றது. PETA செய்தி தொடர்பாளர்கள் இந்த விளையாட்டால் இந்தியாவின் புகழிற்கு கலங்கம் ஏற்ப்படுத்தக்கூடியது.
“அது மட்டும் அல்லாது, அவர்கள் புத்தகங்களில் BARBARIC TMAILANS (காட்டுமிராண்டி தமிழர்கள்) “ எங்கின்றனர்.






8 மே 2014
• 2014ல், ஜல்லிக்கட்டு வழக்கினை மறுபரிசிலனை செய்ய PETA மற்றும் Animal Welfare Board உச்சநீதி மன்றத்தில் மனு அளித்தது. அதில் “ஜல்லிக்கட்டை ரேக்ளா குதிரை பந்தயத்துடன் சேர்த்து தடை செய்ய வேண்டும்” என்ற மனு.
• உச்சநீதி மன்றமும் “காளைகளுக்கும் சித்திரவதைக்கு எதிரான சட்டங்கள் உள்ளன“ என்றது.
• உச்சநீதி மன்றம் Article 21 ன் படி, ஏறுதழுவுதல் விளையாட்டுகளில் விலங்கு உரிமை மீறல் நடைபெறுகிறது என்று விளையாட்டினை தடை செய்தது.

“இந்திய விலங்குகளுக்கு இது LANDMARK (மைல்கல் வெற்றி)” என்று PETA பிரபலங்கள் அறிவித்தனர்
8 ஜனவரி 2015
அரசியல் கட்சிகளின் ஆதரவு
• அரசியல் கட்சி ஆதரவோடு ஜல்லிக்கட்டு சங்கமும் பல்லாயிரக் கணக்கான மக்களும் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடினர்.
• திமுக, ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களுடன் ஒற்றுமை காட்ட வேகமாக போராட்டத்திற்கு ஆதரவு அறிவித்தது.
• தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பாரத பிரதமர் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு தடையை இரத்து செய்ய கடிதம் எழுதினார்கள். சிறப்பு . பாரளுமன்ற கூடத்தொடரை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் பாரம்பரிய விளையாட்டாகவும் பொங்கல் திருநாளின் சிறப்பம்சமாக அமை.யும்.

29 டிசம்பர் 2015
• உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மத்திய அரசு நடத்த அனுமதி அளித்தது.
• மத்திய அரசு, Protection of Animals Act, 1960 ஐ, திருத்தம் செய்தது. உச்சநீதி மன்றத்தின் விலங்குகளின் அடிப்படை உரிமைகள் திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.


8 ஜனவரி 2016
• மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பிறப்பித்தது.
• மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த நிகழ்ச்சி விலங்கு இல்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் மாற்றி அறிவித்தது.
• மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சமூக வளைதலமான TWEETR ல் அறிவித்தார்.

11 ஜனவரி 2016
• உச்சநீதி மன்றத்தின் ஜல்லிக்கட்டு தடையை மீறி மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தது.
• இதைத் தொடர்ந்து அவசர வழக்குத்தொடர் தலைமை நீதிபதி TS தாகூர் நடந்தது. வழக்கினை ஜனவரி 12 தேதிக்கு ஒத்தி வைத்தார்.
• மனுவானது PETA, Animal Welfare Board of India மற்றும் சில பெங்களூரு NGO க்களால் வழங்கப்பட்டது.

12 ஜனவரி 2016
• உச்ச நீதிமன்றம், மத்திய அரசாங்கத்தின் ஆனையை ரத்து செய்து தடை விதித்தது.
• இடைநிறுத்தம் செய்த ஜல்லிக்கட்டு தடையை அகற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கம் முறையீடு செய்தனர்.
• இடைக்கால தடையை ரத்து செய்த ஜனவரி 7ம் தேதி தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கி அறிவித்தது.
• ஜல்லிக்கட்டின் மீதுள்ள இடைக்கால தடை உத்தரவை, உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் விநியோகத்தின் மூலம் மத்திய அரசு ஜனவரி 7 ஆம் தேதி அறிவிப்பை ரத்து செய்தது.

எழுதியவர் : பிரேம் (13-Jan-17, 3:06 pm)
சேர்த்தது : PREM MECHERI
பார்வை : 672

மேலே