வன்னிய இனம்

வன்னிய இனம்
இது
அந்நிய இனமல்ல
தன்னைத் தூற்றுவோரையும்
போற்ற நினைக்கும்
கண்ணிய இனம்
வீழ்த்துவோரையும் வாழ்த்த
எண்ணிய இனம்
புதுவையின் ஆட்சி
பீடத்தில் மின்னிய இனம்
புதுவையில் புதுமை பல
உண்டு பண்ணிய இனம்
மகான்களை மகன்களாய்ப் பெற்ற
புண்ணிய இனம்

எதற்கும் கவிழ்ந்த
இனமல்ல
இந்தக் கவுண்ட இனம்
இது போரிட்டு வெற்றி பல
கண்ட இனம்

இந்த இனம் பிறந்தபோதுதான்
தமிழ் மண்ணுக்குக் கிடைத்தது
புத்தம் புதிய மணம்
அவன் இறந்த போதுதான்
அந்த விண்ணுக்கு கிடைத்தது
வீர நெஞ்சம் கொண்ட மனம்

சரித்திரம் படைத்த குலம்
இந்த சத்திரிய குலம்

இது
சிங்கத்தினும் மேலாய்
சினம் கொண்ட இனம்
தங்கத்தினும் மேலாய்
குணம் கொண்ட இனம்

மக்கள் தொகையில்
கணம் கொண்ட இனம்
மயில் தோகையில்
மனம் கொண்ட இனம்

இது
எங்கசாமி பிறந்த இனம்
நாட்டை ஆள
ரங்கசாமி பிறந்த இனம்

இது
போருக்குச் சென்ற இனம்
பேருக்குச் சென்ற இனம் அல்ல
இது
போராடி வென்ற இனம்
நீராடி வந்த இனம் அல்ல

இந்த இனம்
சூரியனிலிருந்து தெறித்த துகள்
இறைவன் சந்நிதியில் எரிகின்ற அகல்
வீரத்தை பிரதியில் காட்டும் நகல்
தீரத்தை பிறவியில் ஊட்டும் பகல்

இவ்வினத்தை எதிர்கொள்ளத்
துணிவின்றி தானே புயல்
தானே ஓடியது
நாடா புயல் நாடாமலே ஓடியது

இவ்வினத்தோரின் சிறப்பே
எவ்வினத்தோரையும்
பாகுபாடின்றிப் பழகுவதே
யாரையும் புண்படுத்தாது ஒழுகுவதே

படையாட்சிகள் படையாகச்
சேருவோம் நீதியினைமட்டும்
ஆட்சியிடம் கோருவோம்

இந்தியப் பெருங்கடலாய்
வன்னிய புகழ் நீண்டிருக்கட்டும்
இவ்வுலகை ஆண்டிருக்கட்டும்
அதற்குத் துணையாய்
இந்த புதிய ஆண்டிருக்கட்டும்

எழுதியவர் : குமார் (13-Jan-17, 11:16 pm)
பார்வை : 1848

மேலே