பொங்கல் நல்வாழ்த்து
உழவின் பெருமைதனை
உலகெல்லாம் சாற்றி
அறுவடை திருவிழாவென
ஆதவன் போற்றி
இந்திர விழாவென
மாமழை போற்றி
தைத்திருநாளென
தமிழ்மகள் போற்றி
மாட்டுப் பொங்கலென
ஆவினம் போற்றி
கன்னலின் சுவைமிகு
கவிதைகள் பேசி
புதுப்பானையில்
பொங்கலிட்டு
உள்ளமெல்லாம்
உவகை பொங்க
கொண்டாடிவோம்
பண்பாட்டுத் திருநாளை.
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
