அனுபவமே வாழ்க்கையடா

நெடிய கொடும் பாதை
பாதையெல்லாம் பாட்டில் துண்டு
கால்களிலோ கவசமில்லை
கண்களுக்கு வெளிச்சமில்லை !!!!!!!!!!!

பயணமோ பணிக்கிறது
பாதைமேலே நடக்கிறது
பாதங்களோ பரிதவிக்க
பாதையெல்லாம் உதிரமப்பா !!!!!!!!!

எதிர்நீச்சல் போட்டாலும்
எரிகின்ற தீயாற்றில்
கருகுவதோ நேர்மையொன்றே
கள்ளமானம் வெல்லுதிங்கே !!!!!!!!!

விழிபிதுங்கம் கண்களையும்
விரல்களால் குத்துகின்ற
விதியென்னும் கள்வனின்
விளையாட்டை என்ன சொல்ல !!!!!!

அழுதாலும் தொழுதாலும்
அன்பு செய்ய ஆளில்லை
ஆண்டவனின் படைப்பினிலே
அவமானம் கொஞ்சமில்லை !!!!!!!

எத்தனையோ தடைகளைத்தான்
எதிர்நோக்கி சென்றாலும்
இழுக்கின்ற கைகளாலே
வழுக்குவதே வாடிக்கை !!!!!!!!!

நேர்மையான மனிதர்களின்
வியர்வைக்கும் மதிப்பில்லை
படைத்தவனின் விளையாட்டில்
பாவமென்று கணிப்பில்லை!!!!!!!!!!

அழுவதற்கு மனமில்லை
அச்சப்பட கோழையில்லை
நம்பிக்கை ஒன்றாலே
நாளெல்லாம் கழிகையிலே !!!!!!!!!!!

கட்டாய காலத்தின்
கருணையில்லா தாக்குதலால்
நிலைகுலைந்து போனதுதான்
நிதர்சன உண்மையப்ப !!!!!!!!!

ஊரெல்லாம் உறவிருக்க
ஒட்டுமொத்தமும் ஒதிங்கிருக்க
பக்கத்துணை ஏதுமில்லா
பாவ வாழ்க்கை நான் கடக்க !!!!!!!!!!!!

காசுக்கே மாரடிக்கும்
கல்நெஞ்ச உறவெல்லாம்
கத்தியால் நெஞ்சினிலே
காலத்திற்கும் குத்துதிங்கே!!!!!!!!!!

விதியென்று சென்றாலும்
விமர்சனங்கள் ஆர்ப்பரிக்க
வலிதாங்கும் பாதம்கூட
மனம் நொந்து அழுகுதய்யா !!!!!!!!!!

தோள்கொடுக்க ஆளில்லை
துயரத்தின் பாதையிலே
மீள்கொள்ள செய்பவனோ
நீல் தூக்கம் கொண்டுவிட்டான் !!!!!!!!!!

இளமையிலே ஆரம்பித்த
என்கால பயணத்தில்
எத்தனையோ துன்பங்களை
இன்முகத்தால் வென்றுவிட்டேன் !!!!!!!!!!

வஞ்சகத்தால் வாட்டிவந்த
நெஞ்சகத்தை கண்டுவிட்டேன்
துன்பமான நேரத்திலே
துரோகிகளை புரிந்துவிட்டேன் !!!!!!!!!

கருணையில்லா காலத்தின்
கண்டிப்பு பாடத்தால்
காலமென்னும் தேர்வினிலே
அனுபவத்தில் தேர்ச்சி பெற்றேன் !!!!!!!!!!

கவிஞர் - சுந்தர விநாயகமுருகன் -புதுவை (சு வி)

எழுதியவர் : விநாயகமுருகன் (14-Jan-17, 6:55 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 174

மேலே