போலியாக வரும் ஈ மெயில் வேலை வாய்ப்பு அயல்நாட்டு வேலை நியமன உத்தரவுகளை நம்பி ஏமாறாதீர்கள்
போலியாக வரும் ஈ மெயில் வேலை வாய்ப்பு அயல்நாட்டு வேலை நியமன உத்தரவுகளை நம்பி ஏமாறாதீர்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் ஸ்காட் லேண்ட் இல் ஒரு பள்ளிக்கு ஆங்கில ஆசிரியர் மற்ற பாடங்களுக்கு ஆசிரியர் வேலைகள் காலியாக இருப்பதாகவும் உடன் சுயவிபரங்களுடன் கூடிய விண்ணப்பம் கோரி இருந்தார்கள் அந்த மின்னஞ்சலுக்கு பதிலாக என்னை பற்றிய சுயவிபரங்களுடன் விண்ணப்பம் செய்தேன்
ஒரு வாரம் கழித்து என் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பணி நியமன ஆணையும் அத்துடன் விசா மற்றும் வேலைக்கான அனுமதி ஸ்காட் லேண்ட் இல் தங்கி பணி புரிய அந்நாட்டு அரசின் அனுமதி பெறவும் ஒரு முகவரி அணுகுமாறு மின்னஞ்சல் கிடைத்தது
நான் மேற்படி எனக்கு கிடைத்த மின்னஞ்சலை அந்த பள்ளியின் நிர்வாகத்துக்கும் ஸ்காட் லேண்ட் இல் உள்ள இந்திய தூதரகத்துக்கு அந்த பணி நியமன ஆணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த கோரி அனுப்பியிருந்தேன் . அதிர்ச்சி என்னவென்றால் அந்த பணி நியமன ஆணை போலியானது என்றும் அதை நம்பி யாரிடமும் தொடர்புகொண்டு பணம் எதுவும் கொடுத்து ஏமாறவேண்டாம் என்றும் இருந்தது மேலும் LONDON இல் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மேற்படி செய்தியை பலருக்கும் தெரியும் படி பகிருமாறு கூறியிருந்தது எனவே தயவு செய்து இப்படிப்பட்ட மின்னஞ்சல்களை நம்பி ஏமாறவேண்டாம்
Fraud Offer letter is attached Herewith