எனக்குப் பிடித்த மனிதர்கள்

அகிம்சையாலும், ஆத்ம சக்தியாலும் மகாத்மா காந்தியைப் பிடிக்கும்...

மன ஒருமையாலும், மக்களுக்காக வாழ்வை அர்பணித்ததாலும் சுவாமி விவேகானந்தரைப் பிடிக்கும்...

சாதி, மதக் கொடுமைக் கண்டு கடவுளே இல்லையென்று எழுச்சிமிகு கருத்துகளுடன் சமுதாயத்தில் போராடிய தந்தை பெரியாரைப் பிடிக்கும்....

ஒளியே தெய்வமென தனது பாணியில் ஒரு மார்க்கத்தை ஏற்படுத்தி, சமுதாய மேம்மைக்காகப் போராடிய வள்ளலாரைப் பிடிக்கும்....

நேர்மையிலும், பண்பிலும் பெருந்தலைவர் காமராஜரைப் பிடிக்கும்...

கவிஞர்களில் கருத்துகளால் பட்டுக்கோட்டையாரையும், கண்ணதாசனையும் பிடிக்கும்...

கவிதைகளால் பாரதியாரை பிடிக்கும்...

அன்பாலும், கருணையாலும் அன்னை தெரசாவைப் பிடிக்கும்....

ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடி,
தமிழ்நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்து, பெரும்பாலான மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா அம்மாவைப் பிடிக்கும்...

மக்கள் திலகம் எம்.ஜி.யாரை எப்போதுமே பிடிக்கும்...

அறிஞர் அண்ணாவைப் பிடிக்கும்....

முத்தமிழ் கலைஞர் கருணாநிதி ஐயாவைப் பிடிக்கும்...

தான் பிறந்தது தீவிரவாத நாடாக இருப்பினும் அமைதி, சமத்துவம் குறித்து எழுதி போராடிய மாலாலா அம்மையாரைப் பிடிக்கும்....

சுதந்திரத்திற்கு முன்பு பிரிந்துகிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து ஒரு நாடாக உருவாக்கிய இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலைப் பிடிக்கும்...

பகுத்தறிவில் சக்ரடீஸைப் பிடிக்கும்...

இப்படி பல நல்ல மனிதர்களைப் பற்றி நான் அறிந்து, புரிந்து வாழ்வதற்குரிய மனநிலையை சிறுவயதிலேயே என்னுள் விதைத்த எனது தந்தையைப் பிடிக்கும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jan-17, 10:09 am)
பார்வை : 2705

மேலே