கொங்குதேச பெண்ணொருத்தியை அவள் ஊரார் வரவேற்கும் பாடல்
வானம் முழங்க மேகம் இடி இடிக்க
வையம் குலுங்க வந்த மகராசிக்கு
காராளும் குலத்தில் உதித்து
பாராள புறப்பட்ட புயலை
வரவேற்கிறோம் வருக வருகவே
நீதி சொன்ன மகராசிக்கு
நீல வானேறி பறந்த குலக்கொடிக்கு
ஆதி வெள்ளாள வீரம் செறிந்த நாயகிக்கு
ஆலவட்டம் வீசி வாழ்த்துரைப்போம்
காற்றாக வருபவளை
கண்களில் கருணையையும்
கனலையும் கொண்டவளை
மாற்றார்க்கு கூற்றுவனாக உறைபவளை
ஏற்று வாழ்த்திப்பாடுவோம் வாருங்கடி
கொங்குதேசத்தின் மணிவிளக்கை
வங்கக்கடலென ஆர்ப்பரித்தெழுபவளை
சிங்க நிகர் தமிழ் மகளை
தங்கத்தமிழாலே பாடுவோம் வாங்கடி