சுமைகள்

அதிகாலையில் அலறியடித்து எழுந்து..
அரை தூக்கத்தில் அன்னம் வடித்து...

அழகாய் உனை அலங்காரமிட்டு...
அழுக்காய் நானும் உனை என் தோளில் இட்டு..

பிழைப்புக்கு சென்றேன்..
தனியாய்...
நெஞ்சிலே நானும் மீசையில்லாத ஓர் ஆண் தான் என்ற எண்ணத்தோடு
உனை சுமந்துக் கொண்டு...

அங்கு

மண் சுமந்து..
செங்கல் சுமந்து...
வயிற்றிலே வறுமை சுமந்து..

நானும் பெற்று வந்த கூலியில்...
என் குழந்தை
உனக்கு
வயிரார உணவு தந்த
அந்த பொழுதினில்
சுகமாகி போகின்றன உனக்காய் நான் சுமந்த சுமைகள் எல்லாம்...

எழுதியவர் : ஹுசைன் (15-Jan-17, 1:27 pm)
Tanglish : sumaigal
பார்வை : 151

சிறந்த கவிதைகள்

மேலே