கண்ணன் எங்கே

கண்ணன் எங்கேயோ
அங்கேயே எந்தன்
கண்களும்.....கவி
எழுதும்......!!

என் கண்ணன் தான்
கனவிலும்
நினைவிலும்.....காலம்பூராக
காத்துக்கிடக்கும்
கன்னியும் இவள்தான்.....

புல்லாங்குழல்
தரும்
புன்னகையில்
பூப்படைந்தவள்
இவள்தானே.....

மாலையும் காலையும்
மாலையிடுவாய்
என்றே
மணித்துளிகள்
மரணிக்கின்றன......!!

ஒவ்வொரு
கண்ணீர்த் துளிகளிலும்
ஒவ்வொரு
வலிக்கலந்தே
வீழ்ந்து
போகிறது.....

மன்னவனே
தென்னவனே.....என் மரணம்
வரை உன்னை
நினைவால்
அணைப்பேனே......!

உன் ராகம்
வந்து
என் சோகம் தீர்க்குமே.....
கார்மேக தேகம்
தீண்டிட.....மயிலிறகாய்
மண்டியிட்டுக்
கிடப்பேனே......!!!

வெண்ணை திருடிய
வித்தைக்காரா
இந்தப் பெண்ணையும்
திருடிபோவாயா.....என்றே
தினமும்
வெண்ணெயென
உருகுகிறேன்.....!

எந்தன்
வாழ்வின் தீபமும்.....

என்
முடிவின் தீயும்

நீதானே கண்ணா.....!!

எழுதியவர் : thampu (15-Jan-17, 10:18 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : Kannan engae
பார்வை : 1969

மேலே