மனமே அடங்கு

இருக்கும் வரை ஆடாத ஆட்டமாடியோரெல்லாம்,
கூடுவிட்டுயிர் பிரிந்தால்
பிணமென்று பெயர் சூட்டி ஊர் கூடி சுடுகாட்டில் இட்டெரித்து,
வீடுதிரும்புவாரே...

பிணமாய் சுடுகாட்டு நோக்கி செல்கையில் கூட வருவோரெவரும்
பிணத்தோடு தீயினுள் புகுந்து உடன் வருதில்லையே....

கூடி மகிழ்ந்த பெண்டிரும், சீராட்டி வளர்த்த பிள்ளைகளும்
கூடுவிட்டுயிர் போனபின் பிணமென்றுரைத்து எரித்துவிட்டு வீடு திரும்பி வாழ்வாரே தவிர,
பிணத்தோடு கூட வரமாட்டாரே....
இதில் துன்பமென்றெண்ணி துயர் கொள்ள ஏதுமில்லையே என் ஞானத்தங்கமே....

கெடுதல் செய்தோர்க்கு கெடுதல் செய்து எதைப் பெற்றாய் என் செல்லமே?!...
புறமிருந்து கெடுதலை தூண்டுவோர்க்கென்று
உன்னுளிடமளியாதே என்னுடன் பிறந்து எனைப்பிரியாதிருக்கும் என் செல்ல நாய்க்குட்டியே...

பற்றுதலறுத்து விடு...
உயிர்களைத் துன்புறுத்தும் விடயங்களில் உனது பற்றுதலை அறவே அறுத்து விடு...

உனது வழியில் பயணப்படு...
உரிமையற்றதை உரிமை கோராதே...
எவ்வுயிரையும் நேசி...
இரத்தத்தை சிந்தவும், சிந்தவைக்கவும் எண்ணம் கொள்ளாதே...
இரத்தம் உடலினுள்ளே ஓடும்வரையே மனிதநேயம், ஜீவகாருண்யமெல்லாம் உயிர் வாழும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-17, 4:16 pm)
Tanglish : maname atangu
பார்வை : 907

மேலே