“ஜல்லிக்கட்டு” ஒரு பார்வை
காளை மாட்டின் கொம்புகளில் பணத்தை (சல்லியை) துணியில் முடிந்துக் கட்டி, அதன் பின் அக்காளையை விரட்டி, அதுமிரண்டு ஓடும் போது அடக்கி, அவ் முடிச்சை அவிழ்த்தால் அப்பணம் அடக்கிய வீரனைப் போய்ச் சேரும். இந்த வீரவிளையாட்டு தமிழர்களின் வீரத்தைப் பிரதிபலிக்கும், பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மரபு வழிவந்த விளையாட்டுஎன்பதை எவரும் மறுக்கமுடியாது. திராவிட மாநிலங்களில் இவ் விளையாட்டு நடக்கிறது. மிருக வதை அடிப்படையில்அவ்வீர ;விளையாட்டுக்குச் சட்டத்தின் படி தடை உருவாகியது.
காலப்போக்கில், ஜனநாயகத்தின் புது சட்டங்களோடு மனித உரிமை மீறல்கள் ,மிருகவதை, சிறுவர், முதியோர் வதை, ராகிங் என்ற பகிடி வதை போன்றவற்றை எதிர்த்துப் பல சமூகக் குழுக்குள் உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மரபுவழிவந்த ஜல்லிக்கட்டை எதிர்த்து மிருக வதை என்ற பெயரில் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.
காளை, சிந்து நதிபல்லத்தாக்கு காலம் முதற்கொண்டு தமிழரின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. இதில்முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, காளை சிவனின் வாகனம். ஆகவே காளை வணக்கத்துக்கு உரிய மிருகம். நந்திக்குஇந்துக்கள் தீங்குவிளைவிக்க முடியமா என்ற கேள்வி வருகிறது? இந்துக்களின் நாடான இந்தியாவில் அம்மிருகத்தைஎப்படி சித்திரவதை செய்ய அனுமதிக்க முடியும் என இந்து மத வாதிகளான ஆட்சியாளர்களும் நீதிமன்றமும் வேறு ஒருகோணத்தில் சிந்தித்திருக்கலாம்.
மிருக வதை என்பது மிருக மாமிசம், கோவில்களில் ஆடு, கோழி பலி கொடுப்பது போன்றவையும் அடங்கும். மிருகங்களின் மேல் சினிமா நட்சத்திரங்களுக்கு விளம்பரத்துக்காகவோ என்னவோ அதிகப் பற்றுண்டு என்பதைபிரிட்ஜட் பார்டோ போன்ற பிரான்சு தேசத்து நடிகையில் இருந்து தமிழ்நாட்டு திரிஷா போன்ற நடிகைகள் வரை உண்டுஎன்பதை அறியலாம். மிருகங்களின் மேல் பற்று, அவர்களின் உரிமை. பல கோணங்களில் பல விருப்புகள் உள்ளவர்கள்மனிதர்கள். அதனால் ஒருவரின் விருப்பு எங்களுக்கு ஒத்து வராவிட்டால் அவரை இகழ்வது தமிழர் பண்பாகாது.
சிலம்படி, கராத்தேயும் மரபு வழிவந்த விளையாட்டுகளாகும். குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டுகள்;ஆபத்து நிறந்தவை . இதற்கு உதாரணம், கசியஸ் கிளே ( முகமது அலி) என்ற பிரபலயமான குத்துசண்டை வீரன்இறுதியில் பார்கின்சன் (Parkinson) என்ற நடுங்கும் வியாதியால் மரணத்தைத் தழுவியது பலர் அறிந்தது.
இந்த ஆபத்தான விளையாட்டுகளோடு ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டாகக் கருத முடியாது. ஜல்லிக்கட்டுவின் போது காயையின் கொம்பு குத்தி மரணம் சம்பவித்ததை எவரும் அறியவில்லை. அதேபோல் காளைமாடுதுன்புறுத்தப்பட்டு மரணித்ததை எவரும் ஆறியவில்லை. கற்பகம் போன்ற சினமா படத்தில்; அது நடந்திருக்கலாம். அதனால் ஜல்லிக்கட்டு மரபு வழிவந்திருப்பதால் தடைசெய்வது நல்லதல்ல. அப்படி சட்டத்தின் மூலம் தடைசெய்வதானால் மரபு வழி வந்த கலைகள், மூடப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும்; தடைசெய்யவேண்டும்.
ஸ்பெயின் நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டு மரபுவழியாக நடந்து வருகிறது. அதற்குத் தடையில்லை. ஆனால்அங்கு காளைகளின் மேல் ஈட்டி எறிந்து, காயப்படுத்தி அடக்குவார்கள். சிவப்பு நிறத் துணியைக் காளைக்கு காட்டி, காளையை மிரளச் செய்வார்கள்.; இது ஒருவித மிருக வதையாகும். ரொடியோ விளையாட்டு; வட, தென் அமெரிக்காவில்; குதிரைகளையும் காளைகளையும் அடக்கும் விளையாட்டு. அதற்குத் தடையில்லை.
பல இடங்களில் தீ மிதிக்கும் வைபவம் கோவில்களில் நடந்து வருவதைப் பலர் அறிந்ததே . சிறுவர்களும் பெண்களும், ஆண்களும் சேர்ந்து தீ மிதிக்கிறார்கள். அது நேர்த்திக்காகச் செய்யும் செயல். தூக்குக்காவடியும் நேர்த்திக்காகச்செய்வது. இவை ஆபத்தான செயல்கள்;, ஆனால் தடையில்லை.
கிரிக்கட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளைப் பாவித்து அரசியல் நடத்துவதும், பணம் சேர்ப்பதும், விளம்பரம்தேடுவது தற்போது; பழக்கமாக வந்துவிட்டது. தயவு செய்து மரபுவழிவந்த விளையாட்டுகளோடு அரசியலைக்கலக்காதீர்கள். மரபுவழிவந்த கலைகள், விளையாட்டுகள் அழியக் கூடாது. வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு ஒலம்பிக்சில்ஒரு விளையாட்டாக வந்தாலும் வரலாம்.
*******