ஆயுள் உனக்கு நீளனும்
ஆயுள் உனக்கு நீளனும்
__________________________
அன்பே வடிவென உணர்ந்தேன்
அழகுத் தாயே..!
ஆயுள் உனக்கு வேண்டி
ஆண்டவனை கேட்கிறேன்
ஆயுள் உனக்கு நீளனும்...
அஞ்ஞனம் தீட்டா
அழகு விழி விழிக்குள்ளே
ஆசைகள் ஆயிரம்
ஆகமனம் அன்பு மக்களிடம்
ஆயுள் உனக்கு நீளனும்...
அண்ணம் போன்ற அழகியுன்
அன்பின் ஆழம் அளவிட
ஆழியளவில்லை அதை விஞ்சிய
ஆதரம் உன்னிடம் கண்டேன்
ஆயுள் உனக்கு நீளனும்..
அமுதமூட்டி அன்பாலே
அறிவூட்டிய அழகியே.!
ஆராட்டு ஒலிக்கிறதின்னும்
ஆகம் நிறைந்த அன்பு உன்னிடம்
ஆயுள் உனக்கு நீளனும்
அகமொன்று புறமொன்று என்றில்லை
அன்னையே உன் பேச்சுக்கள்
ஆற்றாமை தேற்றும்..
ஆரோக்கியம் உன்னை அண்டி
ஆயுள் உனக்கு நீளனும்..
அஸ்க்கியா முபாறக்