புதிய பேருந்து நிலையம்

புதிய பேருந்து நிலையம் : ஆ.மகராஜன்
======================= : ++++++++++++

ஓடும் டவுண் பஸ்ஸில்
யாரோ ஒரு பெருசு
'வேய்ந்தான் குளம் ஒன்னு
குடுப்பா'ன்னு சப்தமாய்
டிக்கெட் கேட்கும் போதுதான்
சுருக்கென்று குத்துகிறது..
ஜொலிக்கும் வணிக வளாகங்கள் சூழ
விஸ்தீரணமாய் பரந்து நிற்கும்
'புது பஸ் ஸ்டாண்ட்' முன்பு
தளும்பத் தளும்பத்
தண்ணீர் நின்ற குளம் என்று..!

- ஆ.மகராஜன், திருச்சி.

எழுதியவர் : - ஆ.மகராஜன், திருச்சி. (19-Jan-17, 12:39 pm)
பார்வை : 80

மேலே