என் தோழனே

ஏய் நீ என் நண்பனே
காலமென்றும் என் முன் பின்னே
ஆன போதும் இப்போதும்
துணையிருப்பாய் என் தோழனே!

ஓகோ இது அன்பென்றால்
ஒரே தட்டில் சோறுன்போம்
ஆகா அது இனிக்கும்போது
அமிதமின்றி வேறுண்டோ ?

வா வா நே வாழ்வென்றும்
வந்து விட்டாய் என் தோழனே
கடன் கொடுத்தாய் உன் நெஞ்சம்
காசு கொண்டா அன்பு அடைக்க முடியும் ?

தா தா தருகின்றாய்
என் நிழலாய் வருகின்றாய்
உந்தன் நட்பு கிடைத்த போதே
உயிர்தெழுதாம் உற்சாகம்

ஏன் நீ நானென்று
ஈருடலாய் ஆனதென்று
கடவுளுக்கே தெரியாதாம்
காணாமல் போய்
அவன் சொல்லுகின்றானே!





எழுதியவர் : . ' .கவி (9-Jul-11, 8:55 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 527

மேலே