தோழியே

என் தோழி நீயென்றால்
இருகண்ணில் ஒரு பார்வைநீ
உன் நண்பன் நானென்றால்
ஒரு கொடியில் இரு மலர்தானோ

ஆண் பெண் வேறென்றால்
உணர்வுகளோ ஒன்றென்று
நாம் நட்பில் வாழவதற்க்கு
நம்பிக்கையாய் தோன்றுகின்றாய்

ஊரெல்லாம் தேடினாலும்
உன் போலே வேறுண்டோ
பேர் எனக்கு உள்ளபோதும்
உன் நண்பனே என் பேர் என்றேன்

அறிவு மட்டும் நீயும் நானாய்
அகமும் புறமாய் மாற்றி கொண்டால்
யுகம் யுகமாய் வரும் பிறவிக்கும்
உற்ற ஞானம் வேறுண்டோ

என் பலமோ உன் பலவீனம்
உன் பலமோ என் பலவீனம்
நிமிடத்திருக்கு நிமிடம் மாறினாலும்
நீயும் நானும் பலமே நட்பிற்கு

எழுதியவர் : . ' .கவி (9-Jul-11, 8:49 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 597

மேலே