எப்படி சொல்வேன்
பார்த்த மாத்திரத்தில் பரிபோன வார்த்தைகள்....
உன் விழி அசைவில்
சைகை மொழி கற்க,
உன் இதழழகில்
இனிய குறல் கேட்க
பிறை நிலவில்
பிழையான வியர்வை துளி
உன் கரங்களில் விழ
அரை மணி நேரம் அசையவே இல்லை நான்.
அடியே......
அதிர்ந்து ஓடாதே
உனைத் தொடர்ந்து வரும் என் நெஞ்சம் அதிர்ந்து
சைகை மொழியையும் மறந்து விட்டால்
எப்படி சொல்வேன் என் காதலை உன்னிடம்.....