ஜல்லிக்கட்டு

கலவரம் நடத்தவில்லை
தமிழ்நாட்டின் நிலவரம் அறிவீரோ?
மத்திய அரசே
தமிழ்நாட்டின் நிலவரம் அறிவீரோ?
பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்படவில்லை
கையில் ஆயுதம் ஏந்தவில்லை
காந்தி மகான் காட்டிய அறவழி போராட்டம்
ஆங்கிலேயனுக்கு இருந்த இரக்கம்
உனக்கில்லையோ?
இந்தியா இளைஞர்கள் கையில்
அன்று வாயளவில் சொன்னார்கள்
இன்று நிஜமாகியது
தமிழர்கள்
அடங்கி போகிறவர்கள் அல்ல
அடக்க பிறந்தவர்கள்
தமிழகத்தை ஆள பிறந்தவர்கள்
நெஞ்சம் அனலாய்க் கொதிக்கிறது
தமிழகத்தின் பாரம்பரியத்துக்கு தடையா?
கோபம் காளையாய் சீறுகிறது
இளைஞர் கூட்டம் இயற்கைச் சீற்றம்
எங்கே வந்து எதை நிறுத்துவது
ஏறு தழுவுதல் என்றால் துன்புறுத்துதலாம்
சொல்கிறது பீட்டா
வெட்கமாய் இல்லை
தமிழ் சொல்லுக்கு
பொருளும் தெரியவில்லை
தமிழன் சொல்லுக்கு
மதிப்பும் வழங்கவில்லை
கண்ணிருந்தும் குருட.ராய்
காதிருந்தும் செவுடராய்
அமைதி காக்கும்
மத்திய அரசே
மாநில அரசே
எத்தனை தினங்கள் ஆனாலும்
அத்தனை மனங்களும்
கடுகளவும் மாறப்போவதில்லை
தடியடி கண்டு ஓடப்போவதில்லை
வேண்டும் வேண்டும்
ஜல்லிக்கட்டு வேண்டும்
என்ற காரவோசம் மட்டுமே
கடைசி உமிழ்நீர் உள்ளவரை…

எழுதியவர் : சரத் குமார் (20-Jan-17, 10:17 pm)
சேர்த்தது : சரத் குமார்
Tanglish : jallikkattu
பார்வை : 65

மேலே