காதல் - தீவிரம்
இன்று என் நண்பன் ஒருவனின் பிறந்தநாள் .அவன் வீட்டு மாடியில் நடந்த விருந்தோபல் முடித்து விட்டு காரில் வந்து கொண்டிருக்கும் பொது அவன் கேட்ட " அக்ஷய் நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா ? " என்ற கேழ்வி என்னை பின்னோக்கி சிந்திக்க செய்தது.
அன்று நான் எதிர்ப்புப் பயங்கரவாதக் அணியில் இருந்தேன். அப்போது தீவிரவாதியுடன் நடந்த ஒரு போரில் நானும் இருந்தேன்.
அது ஒரு பனி பொழியும் காலம். அன்றய தினம் எங்கள் கேப்டன் சொன்னது படி அந்த இடத்தை முற்றுகை இட்டோம். முன் வரும் தடைகளை சுட்டு தள்ளி முன்னேறி சென்று கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் சொன்னான் "அந்த வீடை முற்றுகை இடவேண்டும் அது தான் தீவிர வாதிகள் தங்கி இருந்த இடம் என்று"
நாங்கள் அங்கு விரைந்தோம். உள்ளே புகுந்த நான் பார்த்தது ஒரு பெண் தீவிரவாதியை அவள் சற்றும் பயப்படாமல் எனக்கு முன் தனது துப்பாக்கிஉடன்
நின்றிருந்தாள்.
அவளின் பார்வை என்னை திகைக்க வைத்தது இல்லை இல்லை ஒரு நிமிடம் என்னை மிதக்க வைத்தது.
என் கையில் இருக்கும் துப்பாக்கி சுட மறந்ததோ என்று தோன்றிற்று?
என் கடமை என்னை மீட்டது , அவளை தாக்கி அடிபணிய வைத்தேன் .
என் மற்ற நண்பர்கள் அங்கு வந்தனர் அவளை கைது செய்து அழைத்து சென்றனர்.
அனால் அவளின் கோபம் துடிக்கும் கண்ணும் அந்த வேகமும் என் மனதை வதைத்து கொண்டே போனது.
நாட்கள் நகர்ந்தன , அனால் அவளின் நியாபகம் என்னை விட்டு அகலவில்லை.
பத்திரிக்கைகளில் அவளின் தூக்கு தண்டனையை படித்ததும் என் மனது என்னை அறியாமல் மௌனமாக அழுதது. இது என் முட்டாள்தனம் என்று என் புத்தி சொன்னாலும் மனது அதை பொருட்படுத்தவில்லை.
ஒரு நாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாம் கைது செய்த அந்த தீவிரவாதி பொண்ணுக்கு உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று கடைசி ஆசையாக கேட்டிருக்கிறார் என்றார்கள். இதை சற்றும் எதிர் பார்க்காத நான் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தேன். மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
அடுத்த நாள் நான் அவளை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றேன். அங்கு இருக்கும் காவலர்களின் பார்வையிலும் கேழ்விகள் இருந்தன.
அந்த அறையில் ஒரு ஒளி மட்டும் இருந்தது . இரு காவலர்கள் இரண்டு பாக்கவும் வர நடுவில் அவள் வந்தாள். அவளை பார்த்ததும் எதற்க்காக எழுந்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்னை மீறி நடந்த நிகழ்வு அது.
அவள் என்னை பார்த்து சற்று புன்னகைத்து உட்க்கார சொன்னாள். அனால் அந்த புன்னகையில் ஒரு சோகவும் தெரிந்தது. காவலர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.அவள் பேச ஆரம்பித்தாள்.
என் பெயர் நசீமா. என் அப்பா தீவிரவாத இயக்கத்தில் இருந்தவர். அதனால் சிறு வயது முதலே நானும் அப்படியே வளர்ந்து விட்டேன். அனால் எப்போது உன்னை பார்த்தேனோ எனக்கும் சாதாரண வழக்கை வேண்டும் என்று தோன்றுகிறது. நானும் மற்றவர்கள் போல் மனைவி , குழந்தை, குடும்பம் என்று வாழ ஆசை பெடுகிறேன். எனக்கு தெரியும் இது காலம் கடந்து போன மாற்றம் என்று. உன்னை பற்றி எனக்கு சரிவர தெரியாது அனால் காதல் என்பது எதையும் எதிர்பார்க்காதது என்று இப்போது தான் எனக்கே புரிகிறது. நான் உன்னை காதலிக்கிறேன் அக்ஷய். உன்னோடு காலம் பூரா வாழணும்னு ஆசை படுகிறேன் அனால் அது நடக்காது. நாளை காலைல எனக்கு தூக்கு .உன் பதில் எனக்கு வேண்டாம் என் என்றால் அது எதுவானாலும் என் மனதை காயப்படுத்தும். அதனால் உன் பதிலுக்காக நான் காத்திருக்கலா. செல்கிறேன் நேரமாச்சு.
என்று சொல்லி அவள் என்னை விட்டு நகர்ந்தாள்.
ஓடி பொய் கை பிடித்து எனக்கும் உன்னை பிடிக்கும் என்று சொல்ல என் மனது சொன்னது. அனால் எதுவும் செய்ய இயலாமல் நிற்க மட்டும் தான் என்னால் முடிந்தது.
அவளுக்கும் என்னை பிடிக்கும் என்று சந்தோஷப்படுவதா? இல்லை சொல்ல முடியாமல் போன என் காதலை நினைத்து அழுவதா ? என்று என் மனம் கலங்கி போனது.
இந்த நிகழ்ச்சி மனதை கடந்தது சென்றதும் கண்ணின் ஓரம் சிறு துளிகளுடன் வீடை சென்றடைந்தேன். மனது பாரமாக இருந்தது.
காதல் தோல்வியை விட சொல்லாத காதல் மிகவும் கொடியது.