ஜென்மசரித்திரம் பாகம் 3

அம்மாவிடம் அந்த இருட்டறை பற்றி எப்படியாவது கேட்டு விட வேண்டுமென பரபரப்புடன் வீட்டிற்குச் சென்றான் விக்ரம்.
ஆனால் அங்கு நிகழும் காட்சிகளை கண்டு வியந்தான்.அதாவது அந்த சமயத்தில் அவனுக்கு அடையாளம் தெரியாத நான்ங்கைந்து நபர்கள் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கையில் தாம்புல தட்டுடன் வந்தனர்.
வந்தவர்கள் அனைவரும் விக்ரமை கண்டவுடன் அவந் அருகில் சென்று நலம் விசாரித்தனர்.அவனும் தனக்கு அவர்களை தெரிந்தவர்களை போல் காட்டிக் கொண்டான்.ஆனால் அவர்கள் சென்றஅடுத்த கனத்தில் அம்மாவின் அருகில் சென்று அவர்களைப் பற்றி அறிந்துக் கொண்டான்.அவர்கள் அனைவரும் தனது பூர்வீக ஊரான கும்பகோணத்தில் இருந்து வந்தவர்களென்றும் அங்குள்ள கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தந்து திறந்து வைக்க கோரி வந்தனர் என்றும் விக்ரமின் அம்மா கூறினார்.

அம்மாவின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்த விக்ரம் சற்று திடுக்கிட்டவனாய் கும்பகோணத்தில் இருந்து இங்கு இடம் பெயர்ந்த காரணத்தை கேட்டான்.அனால் அம்மாவோ வழக்கம் போல் அப்பாவின் மரணத்தையே ஒரு காரணமாக கூறினார்.ஆனால் விக்ரமிற்கு அம்மாவின் கூற்றில் உண்மை இருப்பதாய் தோன்றவில்லை.அம்மா தன்னிடம் ஏதோ ஒன்றை மறைப்பதாக உணர்ந்தான்.ஆக அந்த உண்மையை அறிந்துக் கொள்ள தானும் கும்பகோணத்திற்கு வருவதாக கூறினான்.ஆனால் அம்மாவோ சற்று பயந்தவராக தோன்றி உடனே அவனது வார்த்தைகளை மறுத்தார்.

அவனது வார்த்தைகளுக்கு அம்மா மறுப்பளித்தாலும் அவனது பிடிவாதத்தால் ஒப்புக்கொண்டார்.விக்ரமும் ஒரு ஆர்வத்துடன் கல்லூரிக்கு விடுப்பளித்து விட்டு கும்பகோணத்திற்கு புறப்பட்டான்.
போகும் வழியெல்லாம் உள்ள இயற்கை காட்சிகள் அனைத்தும் அவனுக்கு ராகினியின் நினைவையே தூண்டின.ஒருபக்கம் அவனுக்கு ராகினியை காணவேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது,ஒருபக்கம் ராகினிப் பற்றிய உண்மைகளை அறிய வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறது.இப்படியே அவனது நினைவலைகள் அவனை பட்டுக்கோட்டைக்கும் அவனது உடல் கும்பகோணத்திற்கும் வந்தடைந்தது.

கும்பகோணத்திற்கு வந்தவுடன் அவர்களை வரவேற்க ஒரு பட்டாளமே தாரத்தப்பட்டையுடன் வந்தது.வந்தவர்கள் அனைவரும் விக்ரமையும் அம்மாவையும் ஊர்வலமாக அவர்களின் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.அவ்விடம் வந்தவுடன் ஊர் பெரியவர்கள் அனைவரும் அவர்கள் அங்கு தங்குவதற்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்தனர்.
ஊர்வலத்தில் குதூகலமாய் வந்த விக்ரம் திடீரென் அமைதியானான்.அவர்கள் வசிக்க போகும் அரண்மனையின் அமைப்பைக் கண்டு திகைத்தான்.ஒரு ஊர்அளவிற்கு உள்ள இடத்தில் ஒற்றை அரண்மனையாய் காட்சியளித்த அந்த இடத்தைக் கண்டு வாய் பிளந்தான்.ஆனால் அம்மாவோ கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டார்.விக்கரம் அதை கண்டும் காணாதவாறு நடந்துக் கொண்டான்.

அரண்மனையில் உள்ள பரிவாரங்கள் எல்லாம் சீரும் சிறப்புமாக இருந்தது. வந்த அசதியில் விக்ரம் ஓய்வெடுத்தான்.ஓரிரு நாட்கள் கழித்து அரண்மனையில் உள்ள இடங்களை எல்லாம் சுற்றி பார்க்க ஆவலுடன் கிளம்பினான்.அங்குள்ள கலைச்சிற்பங்கள் அனைத்தும் அவனை ஈர்த்தன.ஓவியங்களையும் சிற்பங்களையும் கண்டு ரசித்தபடி சென்றுக் கொண்டிருந்தவனுக்கு ஒரு சில ஓவியங்களை பார்க்கும் போதெல்லாம் ஏதேதோ உருவங்கள் அவன் நினைவில் கடந்து சென்றது.ஒரு சில ஓவியங்கள் அவன் நினைவை முற்றிலுமாக இழக்கச் செய்தது.அது ஏனென்று அவனுக்கும் தெரியவில்லை.அவன் நினைவிழந்து மூர்ச்சை அடைந்து கிடப்பதனை அறிந்த விக்ரமின் அம்மா பதட்டத்துடனும் பயத்துடனும் ஓடி வந்தார்.மருத்துவர்களை அழைத்து பார்க்கையில் அவர்கள்,அவனுக்குஉள்ளுக்குள் ஏதோ அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.மூர்ச்சை தெளிந்த கொஞ்ச நேரத்திற்கு ஏதும் பேசாதவனாக அமைதியாக இருந்தான்.பிறகு அனைவரும் அவ்விடத்தை விட்டு நீங்கி சென்றவுடன் விக்ரமின் அம்மா அவன் மூர்ச்சையடைந்த காரணத்தைக் கேட்டார்.ஆனால் அவன் வாயேதும் திறக்கவில்லை. பின்பு அவனை வற்புறுத்தி கேட்ட நிலையில் நடந்த அனைத்தையும் கூறினான்.

அவன் வார்த்தைகளை கேட்ட அம்மா மிகவும் பயங்கரமாக கோப்பட்டு அவனை வன்மையாக கண்டித்தார்.அம்மாவின் வார்த்தைகள் அனைத்தும் விக்ரமிற்கு புதிதாக இருந்தது.அவனை இதுவரையிலும் அவ்வளவு வன்மையாக கண்டித்ததில்லை.
எனவே அதன் காரணத்தை அறிய முற்பட்டான்.அம்மாவிடம் மீண்டும் மீண்டும் அதைப்பற்றி கேட்டுக் கொண்டே இருந்தான்.இந்த அரண்மனையில் என்ன இருக்கிறதென்றும் எதற்காக அந்த ஓவியங்களை காணக் கூடாதென்றும் கேட்டான்.வந்த நாள் முதலில் இருந்து அம்மாவின் முகம் சரியில்லை என்றும் அவர்கள் எதற்காகவோ அஞ்சுகிறார்கள் என்பதை உணர்ந்தவனாகவே கேட்டான்.

எழுதியவர் : புகழ்விழி (18-Jan-17, 12:13 am)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 320

மேலே