நாம் ஒற்றுமையோடு உலகைப் பாதுகாப்போம் - பாகம் 2

#விழிப்புணர்வு_நாடகம்...

பாகம் 2...

இந்த உலகம் பல இனங்களாக, பல மொழிகளாக, பல நிறங்களாக, பல சாதிகளாக, பல மதங்களாகப் பிரிக்கப்பட்டு,
பிளவுகள் ஏற்பட்டு,
அந்த பிளவுகளின் காரணமாக பல தீவிரவாத இயக்கங்கள் உருவாகி, உலகை நாசம் செய்து வருகின்றனர்...
தீவிரவாதத்தை ஒழிக்க எந்த அரசாங்கமாவது முயற்சித்தால் அந்த அரசாங்கத்திற்கு எதிராக இனவெறி, மொழிவெறி, மதவெறி போன்றவற்றை தூண்டி அந்த அரசாங்கத்தை எப்படி கவிழ்ப்பதென்பதற்காக செயல்படுகிறார்கள் சில அரசியல் தீவீரவாதிகள்...

வெள்ளை ஆடைகள் அணிந்திருப்பதால் அவர்களை சமதான தூதர்களென்று எண்ணிவிடாதீர்கள்...
இமயன் தூதர்கள்...
சகுனியின் சீடர்கள்...

உலகில் அதிக தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் இஷ்லாமியம் மதத்தைச் சேர்ந்தவையாகவே இருக்கின்றன...
இவ்வமைப்புகளைக் சார்ந்தவர்கள் தங்களுடைய தீவிரவாதச் செயல்களை நியாயப்படுத்தக் குரான் வசனங்களையே பயன்படுத்துகிறார்கள்...

(ஒரு பத்திரிக்கையாளர், ஒரு இஷ்லாமிய தீவிரவாதி ஒருவரிடம் பேட்டி காண்கிறார்...)

பத்திரிக்கையாளர்:- வணக்கம் ஐயா, உங்களிடம் பேட்டி காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்..
கேள்விகளைக் கேட்கலாம்..

தீவிரவாதி:- ம்ம். கேளுங்கள்...

பத்திரிக்கையாளர்:- நம் உலகில் சதா வெடிச்சத்தமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது..
பஸ்ல போனால் அங்கேயும் வெடிக்குது.
இரயிலில் போனால் அங்கேயும் வெடிக்குது.
சரி கோவிலுக்காவது போகலாம்னு போனால் அங்கேயும் வெடிக்குது.
சர்ச்சுக்கு போனால் அங்கேயும் வெடிக்குது.
அப்போ மக்கள் எங்க தான் போவது சார்...

தீவிரவாதி:- இது தர்மத்திற்காக நடக்கிற யுத்தம். இதில் பந்தபாசத்திற்கு இடம் கிடையாது...

பத்திரிக்கையாளர்:- தர்மம் அன்பையும் கருணையும் அடிப்படையாகக் கொண்டது..
இந்த யுத்தத்தில் நீங்கள் சாகடிப்பதெல்லாம் அப்பாவி மக்களைத் தான்.
ஆதலால், இதைத் தர்மத்திற்கான யுத்தமென்று எவ்வாறு ஏற்பது??..

தீவிரவாதி:- இஷ்லாமியர்கள் அல்லாதவர்கள் எங்கள் இனத்தை அழிப்பதில்லையா?
அதுமட்டுமல்லாமல் இஷ்லாமியர்கள் அல்லாதவர்கள் பாவங்களில் மூழ்கிவிடாமல் தடுத்து மீட்டெடுக்கிறோம், " (போர் விலக்கப்பட்ட
துல்கஃதா,
துல்ஹஜ்ஜு,
முஹர்ரம், ரஜபு
ஆகிய நான்கு)
சங்ககைமிக்க
மாதங்கள்
கழிந்துவிட்டால்
முஷ்ரிக்குகளைக் கண்ட
இடங்களில்
வெட்டுங்கள்,
அவர்களைப்
பிடியுங்கள்;
அவர்களை
முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு
பதுங்குமிடத்திலும்
அவர்களைக்
குறிவைத்து
உட்கார்ந்திருங்கள் - ஆனால்,
அவர்கள் (மனத்திருந்தி
தம்
பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு,
தொழுகையையும்
கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும்
(முறைப்படிக்)
கொடுத்து
வருவார்களானால் (அவர்களை)
அவர்கள்
வழியில்
விட்டுவிடுங்கள் - நிச்சயமாக
அல்லாஹ் மிக்க
மன்னிப்போனாகவும்,
கிருபையுடையவனாகவும்
இருக்கின்றான்.
- குரான் (09:05).
முஷ்ரிக்குகள்-
இணை
வைப்பவர்கள். ", என்ற வசனத்தின் அழிப்படையில் இறை நம்பிக்கையற்றவர்களையும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களையும் மற்றும் இஷ்லாமியர்களில் கடமையற்றவர்களுக்கும் தண்டனை கொடுக்கிறோம்..
ஆகவே இது தர்ம யுத்தமே...

பத்திரிக்கையாளர்:-
குரானின் வசனங்களில் ஜீவகாருண்யம், கருணை பற்றி எடுத்துரைக்கப்படவில்லையா?..
எதற்காக தவறான வசனங்களை எடுத்துக்கொண்டு,
தவறுக்கு மேல் தவறிழைக்கிறீர்கள் அன்பு சகோ??

தீவிரவாதி:- (கோபமாக பத்திரிக்கையாளரை நோக்கி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு) எமது வழியை தவறு என்றிட உமக்கு அதிகாரமில்லை...

பத்திரிக்கையாளர்:- உமக்கு, ஒன்றுமறியாத அப்பாவி மக்களைக் கொல்ல அதிகாரம் இருக்கும் போது,
உமது செயலை, வழியை தவறென்றுரைக்கும் அதிகாரம் எமக்கும் உண்டு..

தீவிரவாதி:- (சற்று சிந்தனையுடன் பத்திரிக்கையாளரை நோக்கி நீட்டிய துப்பாக்கியைக் கீழே இறக்கிவிட்டு)
கத்தியின்றி, இரத்தமின்றி, என் மனதைத் தாக்கி,
என்னைச் சிந்திக்க வைத்துவிட்டீர்களே!..
ஆனால், இதனால் நாங்கள் மாற மாட்டோம்..
இந்த உலகம் எப்போது மாறுகிறதோ அப்போதே மாறிக் கொள்கிறோம்..

பத்திரிக்கையாளர்:- மாற்றம் நம்மில் இருந்தே பிரசவிக்கும் அன்பு சகோ.
இந்த உலகை மாற்ற விரும்பினால், அம்மாற்றம் நம்மிலிருந்தே ஆரம்பமாகிறது...

தீவிரவாதி:- நன்று சகோ. இப்போதே ஆயுதங்களைக் கைவிடுகிறேன்.
ஆனால், ஒரு சந்தேகம்? ஒருவேளை நான் தங்களை சுட்டுக் கொன்றிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?
உங்களுக்கு அதை பற்றிய பயம் இல்லையா??..

பத்திரிக்கையாளர்:- எதற்காகப் பயப்பட வேண்டும்?.
இந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு வீழ்வது நான் ஒருவன் தான்..
அதனால், அதர்மம் வெற்றிவாகைச் சூடிவிடாது...
என்னைப் போல் லட்சக்கணக்கானவர்கள் விழித்தெழுவார்கள் அன்பு சகோ..

தீவிரவாதி:- லட்சியமென்றால் உங்களைப் போன்று இருக்க வேண்டும் சகோ.
இனி நானும் உங்களில் ஒருவன்..
இனி இந்த துப்பாக்கி, வெடிகுண்டுகள் எங்களுக்குத் தேவை இல்லை....

( அந்த தீவிரவாதியும், அவனுடம் இருந்த தீவிரவாதிகளும், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு,
அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள்..
அரசாங்கள் பொது மன்னிப்பு வழங்கிதோடு தொடர்ந்து அந்த பத்திரிக்கையாளரோடு,
இருக்க வேண்டுமென அனுப்பி வைத்தது...)

பத்திரிக்கையாளரும் அவர்களை ஏற்றுக் கொண்டு, தினமும் சமுதாயத்தில் நடைபெறும் பல நல்ல விடயங்களில் முக்கிய பங்காற்ற வைத்தார்..

பிறக்கும் போது யாரும் கெட்டவர்களாகப் பிற உயிர்களைப் பறிப்பவர்களாக பிறப்பதில்லை...
சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் தான் மாற்றுகின்றன...
அவர்களுக்குத் திருந்துவதற்காக வாய்ப்பளிக்க பல பேர் பத்திரிக்கையாளரைப் போன்று முன் வந்தார்கள்..

விதைகள் விதைத்தால் மட்டும் போதாது.
நீரும் ஊற்ற வேண்டும்..
அப்போது, தான் மரம் வளரும்...

உயர்ந்த லட்சியம் கொள்..
பிறந்ததே அதற்காகத் தான்....

(தொடரும்....)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Jan-17, 3:54 pm)
பார்வை : 884

மேலே