இயற்கையின் சிறப்பு
#காற்று...
தன்னை மாசுப்படுத்துகிறான் மனிதனென்று தெரிந்தும், இயங்கி வருகிறது
சுவாசக்காற்றாய்...
#நிலம்...
தன்னை தோண்டுகிறான் மனிதென்று தெரிந்தும்,
தாங்கி நிற்கிறது தரையாய்....
#சூரியன்...
தன்னை இழிந்துரைப்போருக்கும் சேர்த்து தான் தன் ஒளி கொண்டு ஒளிச்சேர்க்கையால் பிரசவிக்க வைக்கிறான்
உணவை....
இப்படி இயற்கையில் ஒவ்வொன்றும் பல சிறப்புகளை பெற்றிருந்தாலும்,
இந்த அறிவுஜீவி மனிதர்களைப் போல் தற்பெருமை பேசித்திரிவதில்லையே...
இதனால், தானோ,
இயற்கையே தெய்வமென்று பொற்றுகிறார் இளங்கோவடிகள்??....