பற்றுக்கும், வெறிக்கும் வித்தியாசங்களுண்டு

பற்று என்பது நாளும் நன்மையை நோக்கமாகக் கொண்டிருக்கும்...
உதிரம் சிந்தவைக்க உந்தாது...
சக உயிர்களின் நேசிப்பு பற்றுதலின் முதற்படி...
இறைவன் பால் கொண்ட பற்று இறைவனிடம் கொண்ட பக்தியில் வெளிப்படும்..
மொழியின் பால் கொண்ட பற்று அம்மொழியின் சிறப்பிற்குக் காரணமானவற்றைப் பின்பற்றி வாழத் தூண்டும்...
ஒரு தாய், தன் குழந்தையின் மீது கொண்ட அன்பை போன்றதே பற்று...


ஆனால், வெறியானது மனம் தன்னில் புகுந்துவிட்டால் நன்மை, தீமையென்ற பாகுபாடிருக்காது...
பிடிவாதமாக இருக்கும்...
தற்பெருமை கொண்டு அகம்பாவம் அறிவை மறைக்கச் சொன்னதையே சொல்லும்...
தானுரைப்பதன் உண்மையான நோக்கமறியாது...
எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் விளைவு பற்றி அறியாது...
நல்ல பகுத்தறிவு இருந்தும் சுயநல எண்ணமே சிந்தனையாகி,
அதுவே செயலாக நிகழ்த்திக் காட்டி வெற்றி காணவே துடிக்கும்...
ஒரு காமுகன், ஒரு கன்னியின் மீது கொண்ட காம உணர்வை ஒத்ததே வெறி...
வெறி அடங்க வாய்ப்பே இல்லை...
ஏனெனில், அது பிறர் நன்மை உரைத்தாலும், தீமையாகவே எடுத்துக் கொள்ளும்...
தனது செயல்களால் துன்பங்களைப் பெற்று தனது தவறை உணரும் வரை வெறியென்பது அடங்குவதில்லை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Jan-17, 1:20 pm)
பார்வை : 383

மேலே