ஒரு பூ மௌனிக்கிறது

ஓசை இன்றி என்னுள்
நுழைந்த புயல் நீ .........
உயிர் ஈர்க்கும்
உன் பார்வையால் நான்
இன்று தூண்டில் சிக்கிய மீனானேன். ...
பூக்கள் மௌனிக்கலாம்
வண்டுகள் எப்படி ரீங்காரம் மறக்கும்
என் பூவுக்கு ஓர் விண்ணப்பம்
மௌனம் கலைவாயா
உன் மௌனமொழிக்கு அர்த்தம் தான் என்ன?
உன் மௌனச் சுழிக்குள் சிக்கித் திணறும் என் வாலிபம்
வார்த்தைகள் ஏதும் இன்றி பார்வையால் கெஞ்சுகிறது
என் அன்பை ஏறெடுத்தாவது பார்ப்பாயா ??????

எழுதியவர் : (23-Jan-17, 2:35 pm)
சேர்த்தது : கவியாழினி
பார்வை : 100

மேலே