என்னவளே

என்னவளே!

என்னவளே நீ எங்கிருந்தாய் இத்தனை நாள்
உன்னை காணாமல் என் வாழ்வின்
உன்னதங்களை தொலைத்தவனாய்
உன்மத்தம் பிடித்தலைந்தபோது வந்தாய்
இன்னமுதாய்!
என் மயக்கம் தெளிவிக்கும் அருமருந்தாய்!

உன் விழிப்பார்வை என்மேல்விழ
எனக்குள் கவித்துவம் சிலிர்த்தெழுந்தது
செந்தமிழ் கவிச்சரம் மாலைகளாய் தொடர்ந்தது
வந்தாய் அமுதாய் வனப்பில் என் பித்தம் தெளிவித்தாய்
சென்றதேன் கண்ணே !
கனவு பெண்ணாய்

கதறுகிறேனே கேட்கிலையா -என்
காதலின் ஆழத்தில் நானே மூழ்கிப்போகிறேன்
மூச்சடைத்து போவதற்குள் என்
முன் வருவாயா? என்னை மீட்டு போவாயா?
உனக்காகவே உன் நினைவுகளோடு
உன் விழிதிறப்பிற்க்காகவே
உன் இமையோரம் காத்திருப்பேன்

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (23-Jan-17, 8:09 am)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
Tanglish : ennavale
பார்வை : 272

மேலே