சுரேஷ்-ரமேஷ் உரையாடல்- சிரிக்க, சிந்திக்க

சுரேஷ் : டேய் ரமேஷு, நேத்து உன் காதலி
முதல் முதலாய் மனம்விட்டு உன்னுடன்
பேசினாய் என்றாயே எல்லாம் உன் மனம்போல்
இருந்ததா என்ன ?

ரமேஷ் : டேய் மச்சி, உன்னிடம் எனக்கு மறைக்க
ஒன்னும் இல்லடா சொல்லறேன் கேளு :
நான் அவளை ஒரு கேள்வி கேட்டேன்
அதாவது என்னிடம் உனக்கு பிடித்தது
எது என்றேன் ; அவள் கூறிய பதிலில்
ஆடி போய்விட்டேன் மச்சி;
அவள் சொன்னாள் "முதலில் உங்க;நிரந்தர
அரசாங்க உத்யோகம்,சம்பளம் பிறகு கேரட்கவே வேண்டாம்
உங்களைத்தான் என்றாள்; என்னை எனக்கு முதல் ஸ்தானம்
இல்லையா என்றேன் , அதற்க்கு அவள் சொன்னாள் " be practical
my dear, நாம் இருவரும் சேர்ந்து வாழ அந்த வாழ்க்கை நிலைக்க
முக்கியம் உன் உத்யோகம்,வருமானம் ;நம் காதல் வாழ்வில்
ஒன்றியது தானாக நிலைக்கும் என்றாள் , அப்போது நான் கேட்டேன்
நீயும்தான் உத்யோகத்தில் இருக்கிறாய் என்றேன் ,அதற்க்கு அவள்
சொன்னது "அன்பே உத்யோகம் புருஷ லக்ஷணம் ஆக என் ஊதியம்
நினைத்து நம் வாழ்க்கை பயணம் ஓடாது " என்றாள்

சுரேஷ் : மச்சி உண்மையாகவே அவள் ஒரு பிராக்டிகல் பெண்ண தான் என்பேன்
இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் ஒரு லிமிட்டோடு நிற்கும்
வாழ்க்கை ஓடம் ஓட காதலன் காதல் செய்பவன் மட்டும் அல்லாமல்
குடும்பத்தை நடத்துபவண்ணயும் இருக்க வேண்டும் அல்லவா ?

ரமேஷ் ஆமாண்டா சுரேஷு இப்போ அவளை நினைத்து பூரிப்படைகிறேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jan-17, 12:59 pm)
பார்வை : 653

மேலே