ஜல்லிக்கட்டு ஒரு சாதிய விளையாட்டு

ஜல்லிக்கட்டு ஒரு சாதிய விளையாட்டு.....
இதுக்கு போய் மடத்தனமா போராடுகிறீர்கள் எவ்வளவு பிரச்சினை இருக்கு

- பெரியாரை பின்பற்றுவோரின் வாதம்

சரி நீங்கள் சொல்வது போல் சாதிய விளையாட்டாக கூட இருக்கட்டும்,
சாதிகள் மறந்து மதத்தை மறந்து ஒன்று கூடி போராடியவர்களை நீங்கள் முதலில் மதியுங்கள்
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்....

இன்று சல்லிக்கட்டுக்காக போராடும் இவர்கள்
சாதி ஒழிப்புக்கு போராடாமல் இருக்க மாட்டார்கள்
ஏற்கனவே இந்த பேராட்டத்தில் சாதிகள் செத்தே இருந்தது இங்கு....

இந்த தலைமுறை நிச்சயம் அதை செய்யும்... சாதிய விளையாட்டு இன்று தமிழர் விளையாட்டாக மாறிவிட்டதை உணர முடிகிறது.....

பெரியார் கொள்கைகளை திட்டி கொடுக்காதீர்கள்
கொஞ்சம் தட்டி கொடுங்கள் ஏற்க மறுக்க மாட்டார்கள் இவர்கள்......

வாழ்க தமிழ்!! வாழ்க தமிழர்!!
வாழ்க பண்பாடு!!

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (25-Jan-17, 9:29 am)
பார்வை : 326

மேலே