சாதிக்கப் பிறந்தாய்

ஆதிக்க சக்திகளிடம் அடிமையாகி
ஆற்றலை இழந்தத் தமிழ்மகனே
ஆற்றிடப் பணிகள் அடுக்கடுக்காய்
ஆக்கமும் பெற்றிடக் காத்துள்ளன
ஆகமந்தம் அடையாதே புறப்படுக
ஆள்வதும் அடக்குவதும் நம்முரிமை
ஆடுவோரின் ஆட்டத்தை நிறுத்திட
சாதிக்கப் பிறந்தவனே சாட்டையெடு ...!
பழனி குமார்