முதல் அத்தியாயம்
தொடர்ந்த அறப்போராட்டத்தில் தொடங்கியது முதல் அத்தியாயம் !
துவண்டு விட கூடாதென்ன தோலின் மேலேறி நின்றன தோழர்கள்!
பழைய சோற்றின் மீது புதிய துவையல் போல அரசியல் சாயம் பூசின ஆதி கால திராவிட கட்சிகள் !
வெகுண்டு எழுந்த வீரத்தமிழனின்
வெகுமானம் பார் அறிந்தது
பாராளுமன்றம் அடிபணிந்தது !
அடங்க மறுப்பது ஆதி கிழவனுக்கும் இல்லை
பூமி தோன்றிய முதலே கோளோச்சிய ஆதி தமிழனுக்கும் இல்லை!