மீனவர்கள்
விரிந்த கடலில்
நீலம் பூசிக்கொண்டிருக்கும்
வான விரல்களை
கண்டு சிலிர்த்து
வீசும் காற்றில்
மிதந்து வரும்
கருவாட்டு மணத்தில் கொஞ்சம்
எச்சில் ஒழுகி
அலைகளை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்
அந்த படகுகளின்
தலை வருடி
வலைகளின்
பின்னிய கூந்தலை
அழகாய் சிக்கெடுத்து
ஒரு டப்பா சோறு கொஞ்சம்
மீந்த மீன் குழம்பு சாறு
எடுத்து கொண்டு
ஏலேலோ ஐலசா ஏலேலோ
என தெம்புக்கு
ஒரு பாட்டு பாடி
மீன் பிடிக்க போற கூட்டம்
எல்லையில்லா கடலுல
எல்லை தாண்டி சாகுறான்
கேள்வி கேட்க ஆள் இல்ல
கண்ட படி சுடுகிறான்
அன்று எல்லையில அடிச்சிங்க
இன்று எங்க
ஊருக்குள்ளயே அடிக்கீங்க
வாதம் செய்ய கூட
அஞ்சுகிற கூட்டம்
தீவிர வாதி போல என்ன
அடக்குவதேன் சட்டம்
#மீனவர்களை காப்போம்
- கி.கவியரசன்