நினைவுகளிலாவது வாழ்ந்துவிட்டுப்போகிறேன்

நேரில் நீ காட்ட மறுக்கும் கண்கள்
நான் தனிமையில் இருக்கும்போது
என் நினைவுகளில் தோன்றி
கயல்கள்போல் துள்ளி விளையாடுகிறது...

எடுத்தெறிய எண்ணிய நேரம்
என்றோ நான் பார்த்த உன்முகம் புன்னகைத்து
என் நெஞ்சத்தில் பதிந்து கேட்கிறது
“முடிந்தால் எறிந்துவிடு...” என்று.

மறுவார்த்தைக் கேட்காமல் எடுத்தெறிந்தேன்…
எனது பிடிவாதத்தை…
எண்ணிக்கொண்டே இருக்கிறேன் என்
நினைவுகளில் வரும் உன் முகத்தை…

என்றாவது இதுவும் என்னைவிட்டு விலகும்.
அன்றுவரை வாழ்ந்துவிட்டுப் போகிறேன்
என் நினைவுகளில் உன் முகத்துடன்…

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (26-Jan-17, 2:45 pm)
பார்வை : 405

மேலே