என்னிடமாவது சொல்
நீ அனுப்பிய
அழகிய உன் திருமண அழைப்பிதழ் கைகளில் சேர்ந்தது.....
உன் திருமண நாள் நெருங்கும் மகிழ்ச்சியில்
நம் காதலை பெற்றோரிடம் சொல்லத்துடிக்கும் என் மனம்
அதை எதிர்த்து
உன்னிடம் கேட்கிறது...
ஒருமுறை சொல்லடா நம் காதலை என்னிடமாவது.......
என் காதலை வைத்துக்கொண்டு உன் காதலை தூக்கி வேறு பெண்ணிடம் கொடுத்துவிட்டாய் எனக்கூறும்
என் நண்பர்களுக்கும்
உன் நண்பர்களுக்கும்
நான் பதில் கூற வேண்டும்.
இது காதல் திருமணமல்ல என்று.....
என் காதல் தோல்வி அடையவில்லை என்று.....
உன் பெற்றோர் பாசம் வென்றதென்றால் தாங்கிக்கொள்வேன்
வேறொருத்தி பாசம் வென்றதென்றால்
நான் ஒதுங்கிக்கொள்வேன்