என் இந்தியா
அந்நியன் விட்டு சென்றபோது
ஆயிரம் துண்டாய் நின்றது-ஆனால்
அனைவர் மனதும் ஒன்றானது
ஆயிரம் மொழிகள்
பேசிடும் விழிகள்
அன்பால் இணைந்தது
இமயம் தலை
குமரி பாதம்
தேசம் என்றானது
தாமரை மலர்ந்தது
அகிம்சை காந்தி
ஐ என் ஏ நேதாஜி
நீண்ட இரு நதிகள்
கலந்தது தேசக்கடலில்
நூற்றைக் கடந்த கோடிகளில்
மனித வளம்
பிரிவினையற்ற வேற்றுமை
எங்கும் காணாத பண்பாடு
என் இந்தியா
என் தேசம்
என்றே முழங்குவோம்
இந்த குடியரசு இன்னும் வளர
நமது பங்கை வழங்குவோம்...
குடியரசு வாழ்த்துகளுடன்
உங்கள் பூப்பாண்டியன்