பூப்பாண்டியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பூப்பாண்டியன்
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  11-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jan-2017
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  5

என் படைப்புகள்
பூப்பாண்டியன் செய்திகள்
பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2017 5:20 pm

கருத்தமேகம் மழை தருமா
கவலையோடு காத்திருக்கிறேன்..!
கழனியெல்லாம் விளைந்திடுமா
கண்ணில் நீரை பூத்திருக்கிறேன்..!

வருத்தமில்லா வாழ்க்கை வாழ
வருணபகவானே வேண்டிருக்கிறேன்..!
வருமையெல்லாம் ஒழிந்துபோக
வயலை மட்டும் நம்பிருக்கிறேன்..!

பட்ட கடன் ரொம்ப இருக்கு
பட்டினி வயிராய் நாட்கள் கடக்கு
நட்டம் எதுவும் வந்துபிட்டா
நாரி போகும் என் பிழைப்பு..!

விளைஞ்சதுக்கு விலையே சொல்ல
விவசாயிக்கு உரிமை இல்ல
அலைஞ்சு அலைஞ்சு உழைச்சாலும்
அசலே கட்ட முடியவில்லை..!

காட்டிலுள்ள மரத்தை அழிச்சு
கட்டிடமா உயர்த்திபிட்டு
வீட்டுமாடியில் விவசாயம் பன்னும்
வித்தியாசமான உலகமிது..!

பாட்டில் தண்ணியே குடிச்சுப

மேலும்

இனி எழுதும் கவிதைகளில் பிழை வராமல் பார்த்துக்கொள்கிறேன் அண்ணா...நன்றி 21-Dec-2017 11:59 pm
வளமான வரிகள். எழுத்து பிழையை தவிர்க்கவும். 21-Dec-2017 11:23 pm
தங்கள் வருகைக்கும் வளமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பா 21-Dec-2017 5:30 pm
அருமை நண்பரே இயற்கையின் திருவிளையாடலில் மழை முக்கிய பங்கு.பெய்து கெடுக்கும் அல்லது பெய்யாமல் கெடுக்கும். 21-Dec-2017 5:25 pm
பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2017 8:43 pm

அத்தை பெத்த அல்லிமலரே
அன்பு காதலன் நான்தான்டி..!
அந்திவான வெள்ளி நிலவாய்
அலைகிறேன் உனை வேண்டி..!

மனமகளாக உனை நினைத்து
மனம் முடிக்க நினைக்குறேன்டி..!
மனைவியாக வருவாய் என்று
மனதில் ஆசையே விதைக்குறேன்டி..!

உன் கண்ணில் எனை பார்க்க
என் கண்கள் கடவுளே வேண்டுதடி..!
உன் கனவில் நான் இருக்க
என் கவிகள் கடலாய் பெருகுதடி..!

உன் இமையின் இசை கேட்க
என் இதயத்தில் ஆர்வம் வெடிக்குதடி..!
உன் இதழின் பசி போக்க
என் இதழ்கள் ருசிக்க துடிக்குதடி..!

ஆதி முதல் அந்தம் வரை
என் ஆயுள் ரேகை நீதான்டி..!
ஆமாமென்று நீ சொன்னால்
ஆதாம் ஏவாலும் நாம்தான்டி..!

ஆமாமென்று நீ சொன்னாள்
ஆதாம் ஏவாலும் நாம்தான்ட

மேலும்

மிக்க நன்றி அண்ணா 10-Dec-2017 3:29 pm
சிறப்பு மிக சிறப்பு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 10-Dec-2017 3:04 pm
மிக்க நன்றி அண்ணா 09-Dec-2017 5:56 pm
வாழ்த்துக்கள் அருமையான வரிகள்... 09-Dec-2017 5:51 pm
பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2017 3:13 am

வான்மேக தோழியே
வருவாயா கொஞ்சம்
வாசலிலே காத்திருந்து
வாடுகிறதே நெஞ்சம்

மண் மேல் கொண்ட காதலே
மறந்து நீயும் போனாயா
மனதில் கொஞ்சம் ஈரம் சுரந்து
மழையே நீயும் வருவாயா

உன் ஒரு துளி படவே
என் தேகம் ஏங்கி கிடக்கு
ஆர்பரிக்கும் என் மனதை
அமைதி படுத்துவாயா..!

உன்மேல் கொண்ட அன்பினால்
உன்னை போலவே உருகின்றேன்
விண்ணில் இருந்தது போதும்
விரைந்து நீயும் விழுந்துவிடு..!

காடுகளே அழித்த பாவத்திற்கு
கடுங்கோபம் உனக்கிருக்கும்
கண்ணீரோடு மன்னிப்பு கேட்கிறேன்
கடமை உணர்ந்து வந்துவிடு..!

காய்ந்த வயல் போல நானும்
காத்திருக்கிறேன் நாளும்
காலம் தாழ்தியது போதும்
கருணையாக பொழிந்துவிடு..!

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி 06-Sep-2017 11:47 pm
மண் மேல் கொண்ட காதலை மறந்து நீயும் போனாயா.. வரிகள் அருமை... 06-Sep-2017 2:01 pm
தங்கள் வருகைக்கும் வளமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பா 31-Aug-2017 2:18 am
மழைக்க்கான காத்திருப்பில் மனதில் பூத்திருக்கும் கவி மழை துளிபோல இதமான அழகு 31-Aug-2017 12:51 am
பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2017 5:47 pm

என்னை தாங்கும் தாயே...
என்றும் என்பூமி நீயே...
என்னை காக்கும் வானம்
என்றென்றும் என் தந்தையே...

மலருக்கு தேன் தந்த
மனித பறவைகள் நீங்கள்தானே..!
மனதுக்கு மதி தந்த
மாய கலைகளும் நீங்கள் தானே..!

உயிருக்கு மெய் தந்த
உறவின் தொடக்கம் நீங்கள்தானே..!
உணர்வுக்கு உருவம் தந்த
உலகின் உன்னதம் நீங்கள்தானே..!

கண்ணுக்கு இமையாக
கடலுக்கு அலையாக
கனவிலும் பாதுகாத்த
காவல்தெய்வமும் நீங்கள்தானே..!

மண்ணோடு போட்டிபோட்டு
மரமாகும் விதையாக
என் மீது அன்பு காட்ட
எத்தனை போட்டிகள் உங்களுக்குள்ளே..!

விண் மீது அலையாடும்
விண்மீனின் எண்ணிக்கையாக
என் வாழ்வு சிறப்பாக
எத்தணை தியாகம் உங்களுக்குள்ளே..!

மேலும்

தங்கள் வருகைக்கும் வளமான கருத்திற்க்கும் மிக்க நன்றி அண்ணா 23-Aug-2017 1:15 pm
தாய் தந்தையின்றி எம் வாழ்க்கை உதயமாகி இருக்காது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 11:59 am
மிக்க நன்றி தோழி 23-Aug-2017 2:10 am
Super!! ! 22-Aug-2017 10:04 pm
பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2017 7:30 pm

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

ஆற்றினில் மண் இல்லை
காட்டினில் மரம் இல்லை
வளரும் இந்தியாவில்
வளங்கள் எதுவுமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மருத்துவமனையில் மருத்துவரில்லை
மதுக்கடைக்கோ பஞ்சமில்லை
மயானங்கள் நிறைந்தாலும்
மக்கள் மீது அக்கரையில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

சாதி பெயரில் பள்ளிக்கூடம்
சமத்துவத்திற்க்கு இறப்பிடம்
வீதிதோறும் கலவரம்
விதியே மாற்ற யாருமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மதத்திற்கு மதம் கட்சி அமைத்து
மனிதநேயத்தை தோன்றி புதைத்து
மக்கள் மத்தியில் குண்டு வைத்து
மாண்டு போனவர் கொ

மேலும்

மிக்க நன்றி சகோதரி 22-Aug-2017 12:45 am
அருமையான படைப்பு , வாழ்த்துக்கள் ராஜ்குமார் 21-Aug-2017 10:14 pm
நன்றிகள் பல கவி மலரே... 21-Aug-2017 7:32 pm
நாட்டுப் பற்று, சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை தங்கள் படைப்பில் வெளிப்படுகிறது கவிஞரே. 21-Aug-2017 7:28 pm
பூப்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 1:37 pm

அது ஒரு நிலவில்லா இரவு....
உறவுகள் எல்லாம் ஊருக்குப் போன
அவள் வீட்டு பின் வாசலில்
அமர்ந்திருந்த என் மடியில்
ஒரு பவுர்ணமி ...!

அந்த சிவப்பு சுடிதார் அழகூட்டியதுஅவளுக்கு
துப்பட்டாவை தொலைத்து விட்டாள் போலும்

அவள் தான் மெளனம் கலைத்தாள்
" என் மீது அவ்வளவு விருப்பமா....?"
"நிறைய "... எனச் சொல்லி
நெற்றியில் முத்தமிட்டேன் ,

"நான் உன்னை விரும்புகிறேன்" என காதோரம் இதழ் பதித்து
கவ்வி கடித்துச் சொன்னாள் ஆங்கிலத்தில்
அதையே நானும் கூற
அன்பை பொழிந்தாள் இதழோடு இதழாக ....

"எவருக்கும் தெரியாமல்
எத்தனை நாள் இன்னும்
இருளில் இரவில்
யாருக்கும் தெரியாமல்
மறைந்து சந்திப்பது ....?"

"என்னட

மேலும்

பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2017 3:24 am

கல்லூரி காதலில்
கல்லெறிந்து போனவளே...
அந்த காலங்கள் நினைவிருக்கா-நீ
தந்த காயங்கள் நினைவிருக்கா..!

நீதானே உயிரென்று
நித்தம் நித்தம் சொன்னவளே...
இந்த காதலன் நினைவிருக்கா-நான்
வந்த கனவுகள் நினைவிருக்கா..!

மாசற்ற என் மனதில்
மலையளவு உன் நினைவு
சுகமாக வந்த காதல்
சுமையாக வலிக்குதடி..!

இறக்கும் வலி நீ தந்தாய்
மறக்கும் மருந்து யார் தருவா..?
வாழும் வழி தெரியாமலே
வாழுகின்றேன் எப்படியோ..!

தேர்ந்தெடுத்தேன் நான் உன்னை
தேனிருக்கும் மலராக...
பூச்சி உன்னும் பூவென்று
புரியலையே அப்போது..!

உணர்வாக வந்த என்னை
உணவாக கொன்றாயே
உறவாக வளர்ந்த காதல்
உயிரற்று போனதடி..!

கரும்பான நம் காத

மேலும்

மிக்க நன்றி சகோ 12-Aug-2017 8:50 pm
உணர்வாக வந்த என்னை உணவாக கொன்றாயே உறவாக வளர்ந்த காதல் உயிரற்று போனதடி..! /// அருமை சகோ அழகான வரிகள் உங்கள் காதல் போல 12-Aug-2017 8:16 pm
மிக்க நன்றி சகோதரா 06-Aug-2017 5:44 pm
அருமை 06-Aug-2017 5:29 pm
பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2017 1:20 am

ஆப்பநாட்டின் தலைநகரில்
ஆடிபெறுக்கு கொண்டாட்டம்
அன்பர்களே வாருங்கள்-என்
நண்பர்களே வாருங்கள்

அடிதடியே விட்டுபிட்டு
அன்பை மட்டும் ஏத்துகிட்டு
ஊரே கொண்டாடும்
உள்ளூர் திருவிழாங்க...

ஆறடி கம்பெடுத்து
ஆப்பனூரான் சிலம்பு சுத்த
ஆடி காத்தெல்லாம்
ஆவணிக்கு பறக்குமுங்க...

அழகான வீதிகளில்
அழகழகா பெண்கள் வர
ஆசை நாயகனாய்
அத்தை மகளே தேடுவோமுங்க...

கொட்டு சத்தத்துல
கொலவை சத்தம் சேர்ந்திசைக்க
கருநிற மேகமெல்லாம்
கருணை மழை பொழியுமுங்க...

பக்தி பரவசத்தோடு
பால்குடத்தை சுமந்து வந்து
பசும்பொன் சிங்கத்திற்க்கு
பாதபூஜை நடக்குமுங்க...

அன்பர்களே வாருங்கள்-என்
நண்பர்களே வாருங்கள்

தெய

மேலும்

மிக்க நன்றி நண்பா 06-Aug-2017 2:10 pm
அழகான கவிதை 06-Aug-2017 6:51 am
மிக்க நன்றி அண்ணா 03-Aug-2017 9:47 pm
கவிதை வரியில் வீசுது மண்வாசம் 03-Aug-2017 8:05 pm
பூப்பாண்டியன் - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2017 8:31 pm

நிறத்தில் தானடி
நீயும் நானும் வேற வேற...

கொணத்திலோ
கொஞ்சிம் பேசும் குரலிலோ
நீயும் நானும் ஒன்னுதானடி

அந்த அந்தி வானத்தை பாரு
அதுதான்டி உன்நிறம்
அஞ்சு நிமிசம் கழிச்சு பாத்தா
அதுதான்டி என்நிறம்

நிறமாக இருந்தாலும்
நிழலாக இருந்தாலும்
நிரந்தரமென்பது எதுவுமில்லை-நம்
காதலை தவிர..!

பஞ்ச பூதங்களே பார்த்தாயா...
பச்சோந்தி என்று நினைத்தாயா...
இயற்கைக்கு கூட
இறைவன் நிறத்தை மாற்றியுள்ளான்...

எது எப்படியோ
எம்மனசு எப்போதுமே வெள்ளைதான்...
உன்னை வரைந்து வச்சுருக்கேன்
அதன் உள்ளதான்...

மேலும்

நன்றி அண்ணா 03-Aug-2017 1:28 pm
அருமை 03-Aug-2017 12:59 pm
தங்கள் வருகைக்கும் வளமான கருத்திற்க்கும் மிக்க நன்றி அண்ணா 02-Aug-2017 9:46 pm
அவளோடு நினைவுகள் நிழலாகிறது 02-Aug-2017 9:44 pm
பூப்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2017 7:10 pm

சேதுபதி சீமையில-இந்த
செல்லாத பூமியில
உழுது வெதச்சா வெளையாது-அந்த
வானம் மழைய பொழியாது

தாகங்கொண்ட மனசோட
தளராம ஒழைச்சவதான்
வேல்போல குத்துற முள்ள
பூப்போல நெனச்சவதான்
சீம முள்ளு கருவவெட்டி-என்னை
சீமான் போல படிக்க வச்சா

அம்மா உங்கிட்ட பட்ட கடன
எப்படி நான் அடைப்பேன்
இன்னும் ஒரு ஜென்மம் இருந்ததுன்னா
உன்னை நான் சுமப்பேன்

பால் வாசம் மாறாத
பசுமையான நினைவோட
நீ பெத்த புள்ள பூப்பாண்டியன்

மேலும்

பூப்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2017 9:26 pm

முதிர்கன்னிக்கு கிடைத்த தாலி

தமிழகத்தில் தற்போது மழை

மேலும்

அருமை 27-Jan-2017 9:32 pm
பூப்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2017 3:04 pm

அந்நியன் விட்டு சென்றபோது
ஆயிரம் துண்டாய் நின்றது-ஆனால்
அனைவர் மனதும் ஒன்றானது

ஆயிரம் மொழிகள்
பேசிடும் விழிகள்
அன்பால் இணைந்தது

இமயம் தலை
குமரி பாதம்
தேசம் என்றானது
தாமரை மலர்ந்தது

அகிம்சை காந்தி
ஐ என் ஏ நேதாஜி
நீண்ட இரு நதிகள்
கலந்தது தேசக்கடலில்

நூற்றைக் கடந்த கோடிகளில்
மனித வளம்
பிரிவினையற்ற வேற்றுமை
எங்கும் காணாத பண்பாடு

என் இந்தியா
என் தேசம்
என்றே முழங்குவோம்
இந்த குடியரசு இன்னும் வளர
நமது பங்கை வழங்குவோம்...

குடியரசு வாழ்த்துகளுடன்
உங்கள் பூப்பாண்டியன்

மேலும்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் 26-Jan-2017 3:12 pm
ஊக்கமுள்ள வரிகள் அருமை 26-Jan-2017 3:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே