மழையே மழையே
கருத்தமேகம் மழை தருமா
கவலையோடு காத்திருக்கிறேன்..!
கழனியெல்லாம் விளைந்திடுமா
கண்ணில் நீரை பூத்திருக்கிறேன்..!
வருத்தமில்லா வாழ்க்கை வாழ
வருணபகவானே வேண்டிருக்கிறேன்..!
வருமையெல்லாம் ஒழிந்துபோக
வயலை மட்டும் நம்பிருக்கிறேன்..!
பட்ட கடன் ரொம்ப இருக்கு
பட்டினி வயிராய் நாட்கள் கடக்கு
நட்டம் எதுவும் வந்துபிட்டா
நாரி போகும் என் பிழைப்பு..!
விளைஞ்சதுக்கு விலையே சொல்ல
விவசாயிக்கு உரிமை இல்ல
அலைஞ்சு அலைஞ்சு உழைச்சாலும்
அசலே கட்ட முடியவில்லை..!
காட்டிலுள்ள மரத்தை அழிச்சு
கட்டிடமா உயர்த்திபிட்டு
வீட்டுமாடியில் விவசாயம் பன்னும்
வித்தியாசமான உலகமிது..!
பாட்டில் தண்ணியே குடிச்சுபிட்டு
பணக்காரன் வாழ்ந்திடலாம்..!
ஓட்டு வீட்டில் வாழும் எனக்கு
உன்னை விட்டா யாருமில்லை..!
வேண்டாத இடங்களில் எல்லாம்
வேதனை தரும் மழையுனக்கு
தீண்டாமை கொள்கை இருந்தால்
திருந்திவிடு மிகவும் நன்று..!
அளவில்லா வளங்களே எல்லாம்
அழிக்க நினைக்கும் அரசிடமிருந்து
வளரும் இந்தியாவே காப்பற்ற
வந்துவிடு விரைந்து இங்கு..!
வளரும் இந்தியாவே காப்பற்ற
வந்துவிடு விரைந்து இங்கு..!!!