பால் வாசம்

சேதுபதி சீமையில-இந்த
செல்லாத பூமியில
உழுது வெதச்சா வெளையாது-அந்த
வானம் மழைய பொழியாது
தாகங்கொண்ட மனசோட
தளராம ஒழைச்சவதான்
வேல்போல குத்துற முள்ள
பூப்போல நெனச்சவதான்
சீம முள்ளு கருவவெட்டி-என்னை
சீமான் போல படிக்க வச்சா
அம்மா உங்கிட்ட பட்ட கடன
எப்படி நான் அடைப்பேன்
இன்னும் ஒரு ஜென்மம் இருந்ததுன்னா
உன்னை நான் சுமப்பேன்
பால் வாசம் மாறாத
பசுமையான நினைவோட
நீ பெத்த புள்ள பூப்பாண்டியன்