உன் மௌனம் எதுவரை
;
;
;
புருவங்கள் இடையினில்
விழிகளின் நடுவினில்
நினைவுகளின் சிறையினில்
கனவு காதலன் நான் ...
;
அழகினில் கரைந்து
சிரிப்பினில் மயங்கி
சிந்தை உறைந்து
என்னை தொலைத்தவன் நான்
;
கவிதையில் சில வரி
அதன் கருத்தினில் சில நொடி
தரும் வலிகள் இதமடி
நான் கேட்டிடும் உன் சிரிப்பொலி
;
கனவிலும் உன் மொழி
மௌனமே தாய்மொழி
உன் வார்த்தை வரும்வரை
உணர்கிறேன் பிரசவவலி
;
ஒருமுறை சொல்லிட
வாழும் நம் தலைமுறை
உன் மௌனம் எதுவரை
அதற்கில்லையோ வரைமுறை ...