நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
நட்பென்ற உறவு இல்லையெனில்
நானிலத்தில் வாழ்வும் சிறக்காது
இதயத்தின் இறுக்கங்கள் தளராது
இறுதி யாத்திரையும் விரைந்திடும் !
உறவுகளிடம் கூறாத சொற்களும்
இல்லத்தில் உரைக்காத குறையும்
நெஞ்சில் நிறைந்த கவலைகளும்
நட்பிடம் பகிர்ந்திடும் தானாகவே !
உறவுக்கும் உரிமைக்கும் பலருண்டு
பணமெனில் வருவோரும் சிலருண்டு !
உயிர்காக்க துணையாக நின்றிடுவார்
உடனிருப்பர் இறுதிவரை நட்பன்றோ !
துயரங்கள் நேர்ந்தால் துடைத்திடுவர்
நெருடல்கள் இருப்பின் அகற்றிடுவர்
இதயத்தின் வலிதனை குறைத்திடுவர்
நண்பர்கள் என்றும் வாழ்க்கையிலே !
நட்புகளை பெருக்கி நகர்த்திடுவோம்
நாட்களை நட்புடன் கழித்திடுவோம்
நட்பெனும் உணர்வை மதித்திடுவோம்
நாளும் இன்பமுடன் வாழ்ந்திடுவோம் !
பழனி குமார்