மனிதன்
தன்னை உயர்த்த பிறரை தாழ்த்துவான் .....
தன்னை அறிவாளியாக்க பிறரை முட்டாளாக்குவான் ...
தான் பணக்காரன் ஆக மற்றவரை பரதேசி ஆக்குவான் .....
தனக்கு வலிப்பது போல் தான் பிறருக்கும் வலிக்கும் என்பதை ஏனோ மறக்கிறான்.....
தீக்குச்சி எடுத்து தீபம் ஏற்றாதவன்
கொல்லி நன்றாக பத்தவைக்கிறான்.....
பூக்களை வருடத் தெரியாதவன்
பூக்களை கொய்கிறான் .....
மொத்தத்தில் மனிதன் என்ற பெயருக்கு மாண்பு செய்யாதவன் மனிதன் .....