என் அருகில் நீயிருந்தால்

என் அருகில் நீயிருந்தால்

இமைகளும் இமைக்க மறக்கும்
இதயமோ இடைவெளியில்லாமல் துடிக்கும்
இதழ்கள் இயங்க நினைக்கும்
கண்கள் ஒளிப்பதிவு எடுக்கும்
என் விரல்களோ
உன் விரல்களின் மென்மையை ரசிக்கும்
என் கால்களோ
அடுத்த அடியை எடுத்து நடக்க மறுக்கும்
நம்மை கண்ட
பூக்களுக்கும் பூப்புனித நீராடல் நடக்கும்
என் மனமோ
இந்த நிகழ்வை மாற்றும் பூமியின்
நிலையாமையை நினைத்து வெறுக்கும்!!!

எழுதியவர் : (31-Jan-17, 8:55 am)
சேர்த்தது : காளிராஜ் மு
பார்வை : 65

மேலே