அவமானம்

நாம் தமிழர்கள்
மார்தட்டி தைரியமாக சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
வந்தோரை வாழவைத்து சிறப்புடன் சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
புறமுதுகு கட்டாமல் நெஞ்சம் நமிர்த்தி சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
இருந்ததை எல்லாம் இரவோர்க்கு கொடுத்து
இருமாப்போடு சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
தரணியையே வென்றுவிட்ட போதிலும்
பணிவுடன் சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
பண்பாட்டிலே உயர்ந்த நாம்
அன்போடு உரைத்தோம்
நாம் தமிழர்கள் என்று..
காதலிலே ஒழுக்கத்தோடு இருந்து
பண்போடு உணர்த்தினோம்
நாம் தமிழர்கள் என்று..
ஒருவனுக்கு ஒருத்தியென இல்லறத்திற்கே
இலக்கணம் வகுத்துக் கூறினோம்
நாம் தமிழர்கள் என்று..
தவ வாழ்விலே தழைத்தோங்கிய நாம்
தன்னிகரில்லாமல் சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
அறத்தோடு ஆட்சிபுரிந்து உலகுமுன்
சிரம் தாழ்த்தாமல் சினந்தோம்
நாம் தமிழர்கள் என்று..
துரோகத்தால் கொலையுண்ட புதைந்தபோதும்
தண்டனையாய் பொறுத்தருளி பொறுமையாய் உரைத்தோம்
நாம் தமிழர்கள் என்று..

இத்தகு சிறப்புமிகுந்த தமிழகமே
சீர்மிகுந்து வாழ்ந்த தமிழினமே
தேடுகிறோம் நீ தொலைத்த
உன் பேரும் பொருமையும்.

தன்னலமில்லா தமிழ் மாந்தரே இன்று
உன்னலம் மட்டும் கண்டாயோ-அதனால்
அடிமையாய் மாந்தர் கால்தனிலே விழுந்தாயே
பொய்மைக்கும் பதவிக்கும் ஆசையாய்.

சிறப்புமிகு தலைவர்கள் தலை கொடுத்து
வாங்கிய விடுதலை உன் தலைசாய்த்து
வணங்கி விற்றாயே உன்னை நினைந்தாலே
அவமானம் தமிழன் என்று சொல்லவே...
இப்படிக்கு க.கோவிந்தன்..

எழுதியவர் : க.கோவிந்தன் (31-Jan-17, 8:12 am)
சேர்த்தது : K Govindhan
Tanglish : avamanam
பார்வை : 339

மேலே