K Govindhan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K Govindhan
இடம்
பிறந்த தேதி :  17-Nov-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Oct-2016
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  1

என் படைப்புகள்
K Govindhan செய்திகள்
K Govindhan - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2017 9:01 am

அரசியல் தத்துவம்
அரசியல் என்றால்
பகடை உருட்டுதல் அன்று
பணத்தைச் சுருட்டுதல் இன்று !

----கவின் சாரலன்
----இது தற்போதைய நிலமையைப் பிரதிபலிக்கும் எனது கவிதை

'ஐவரை மணந்தவளை பணயமாக வைத்து சூதாடித் தோற்றதும் அரிசியல்தானே? .
பெண்ணை ஒரு பொருளாக நினைத்த தருமர் அரச வம்சத்தைச் சேர்ந்த அறிவாளி! போற்றுவோம்"
---இது பேராசிரியர் மலரின் சடைரிக்கல் பதில்

சூதுப் பகடையை உருட்டினான் சகுனி
மாதுவையும் பொருளாய் வைத்தான் மன்னன்
ஏது என்று என்று கேட்க இல்லை பெரியோரும் அவையில்
தீது வென்றால் தருமனும் தோற்பான் தருமமும் தோற்கும் !

அண்ணாச்சி பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்லுவாரு :

தர்மத்தின்

மேலும்

௧) சரியில்லை என்றால் கதையில்லை ! ௨) பிறக்கும் போது கண் நன்றாகத்தான் இருந்தது; கமலக் கண்ணன் என்று பேர் வைத்தார்கள்; வளரும் போது அது மாலைக்கண் ஆகிவிட்டால் என்னசெய்வது? அதுபோல் தர்மர் கேடுகாலம் வந்ததும் அதர்மராகிப் போனார்! ௩) விட்டதைப் பிடிக்க வேண்டாமா? சூதில் அதுதானே முக்கியம்? அந்தக் காலத்தில் தம்பிமார் சட்டப் படியும் சமூகப் படியும் அண்ணனுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள்; ஆதலால், அண்ணன் தங்களைவைத்துச் சூதாடும் போதும் எதிர்க்காமல் இருந்தனர். ௪) போதையல்ல; வெறி! வெல்ல வேண்டுமென்ற வெறி! இழந்ததெல்லாம் மீட்கவேண்டுமென்ற வெறி! இக் காலத்தில் மோதிரம், செயின் எல்லாம் அடகுவைத்தும், கடன் வாங்கியும் வெறித்தனமாக ஆடுவார்கள். ௫) போரின் தர்மம் கொலை! சூதின் தர்மம் பணயம்! தனக்கு உரிமை இல்லாத பொருளைப்பணயம்வைத்தால்தான் குற்றம்! உரிமையான மனைவியைப் பணயம் வைத்தது குற்றமல்ல, சூது தர்மத்தின்படி! 06-Jul-2017 2:27 am
பணத்திற்கு மதிப்பில்லை என்று டீமானிடைஸ் பண்ணியிருந்த வேளையில் சூதாட்டம் நடத்தியிருப்பாங்களோ ? மிக்க நன்றி சிந்தனைப் பிரிய குமரி அன்புடன்,கவின் சாரலன் 20-May-2017 7:25 pm
அவரு ஆடுனது சரிதான்.! ஆனா பணத்தை மட்டும் வச்சு (என்னை போல) ஆடியிருக்கணும்..! அங்கதான் தப்புபண்ணிட்டாரு.! 20-May-2017 1:02 am
இது வடஇந்திய மன்னர்களின் வழக்கம். முக்கியமாக வைணவ சமயத்தை சேர்ந்தர்வகள் எழுதிய புராணங்களிலே இப்படி கூறப்பட்டு உள்ளது. -----அருமை புதிய தகவல். பாகவதத்தில் கண்ணன் சூதாடியது அவன் மகன் பிரத்யும்னன் சூதாடிய கதைகள் குறிப்பிடப் பட்டிருக்கிறது . திரௌபதி பத்தினிப் பெண்களில் ஒருவராய் போற்றப் படுவாள். ஐவரை அவள் மணந்ததிற்கு தத்துவார்த்தமான விளக்கமுண்டு. இன்றைய கால கட்டத்தில் மட்டுமல்ல அன்றும் அவள் இழிவாக பழிக்கப் பட்டாள் . சீரிய மக்களு மல்லல் ஐவரை கலந்த தேவி ---என்று கர்ணனும் பழித்துரைக்கின்றான் ---பாரதியின் பாஞ்சாலி சபதம் . அகலிகை உடலால் வஞ்சிக்கப் பட்டாலும் உள்ளத்தால் தூய்மையானவள் . போற்றப் படும் ஐந்து பத்தினிகளில் இவளும் ஒருத்தி. பட்டியலில் அரக்க மன்னன் ராவணன் மனைவி மண்டோதரியும் ஒருத்தி . "தருமர் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி தருமம் இல்லாமல் செய்தது மிகவும் தவறு ஐயா." பாஞ்சாலி சபதத்தைப் புரட்டிப் பாருங்கள் தருமன் சூதுக்கு அழைக்கும் சகுனியிடம் இது தவறு என்று எவ்வளவு வாதாடுகிறான் என்பதை . சிறப்பான கருத்து மிக்க நன்றி சிந்தனைப் பிரிய கோவிந்தன் அன்புடன்,கவின் சாரலன் 18-May-2017 3:52 pm
K Govindhan - அன்புடன் மித்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2017 7:37 pm

பதவியை நாடுவதெல்லாம் மக்களுக்காகப் பாடுபடுவதற்காகவா?
அல்லது தன்னை பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவா??

மேலும்

முதலில் தன்னைப் பாதுகாப்பதற்குத்தான் பதவி. எஞ்சினால் பார்த்துக்கொள்வோம் மக்களை. இதுதான் நம் தலைவிதி 18-Feb-2017 9:06 pm
தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக 12-Feb-2017 6:43 pm
POWER , POSITION --- MULTI PURPOSE POLITICAL VENTURES ! உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதி தற்போதைய அரசியல் சீனரியோ --சூழலுக்கு பொருந்துகிறது ! போட்டியிடும் இரு பிரிவினரும் ஒரு சமரசத்திற்கு வந்தால் கட்சியும் ஆட்சியையும் காப்பாற்றப் படலாம் . இந்த பிரஞையுடன் சிந்த்தித்தால் அது நல்லது. இன்றேல் ஆறு மாதத்தில் இன்னொரு இடைத்தேர்தலுக்கு தமிழகம் தள்ளப் படலாம் . "தன்னை பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவா??"------தன்னலம் விடுத்து பொது நலம் கருதி சிந்த்திக்கப்பட வேண்டிய கருத்து . ----அன்புடன், கவின் சாரலன் 12-Feb-2017 9:56 am
தன்னை பாதுகாத்துக்கொள்ளதான் என்பது என் கருத்து 12-Feb-2017 9:43 am
K Govindhan - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2017 10:43 am

பெண்ணழகு பாராட்டுதல் இலக்கியங்கியங்களில்
மிக முக்கியம் பெறுகிறது .
அதிலும் பெண் காதல் கொள்ளுதல் பெண்ணிடம் காதல் கொள்ளுதல்
இலக்கிய அழகின் வேறு ஒரு பரிமாணத்தை தொட்டு நிற்கிறது .

௧.ஏன் ? இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆணினும் பெண்
உன்னத அழகு வளர்ச்சி பெற்றிருப்பதாலா ?

௨. ஆண் பெண்கள் மீது கொள்ளும் மோக மயக்கத்தினாலா ?

௩. உடலிச்சை அல்லது காம உணர்வுத் தூண்டுதலா (ஃ பிராய்டியன் தியரி) ?

உலகக் கவிஞர்களிலிருந்து காவி உடுத்திய நம் இளங்கோ வரை பெண்ணழகைப் பாடாத
கவிஞர்களே இல்லை !
என்னினிய கவிஞர்களே உங்கள் கருத்து என்னவோ ?
----அன்புடன், கவின் சாரலன்

மேலும்

ஆண் அடிமை விடுதலை இயக்கம் என்று பெயர் வைக்கலாமா ? அன்புடன், கவின் சாரலன் 16-Feb-2017 10:10 pm
ஒப்புக்கொள்கிறேன் சகோதரரே, கவிஞன் முதலில் மனிதன் தான். ஆனால் எல்லா மனிதனும் கவிஞன் ஆவதில்லை. தங்கள் கருத்தை பதிந்து விட்டீர்கள். இனி மற்றவர்கள் கருத்திற்கு வழிவிடுவோம். கருத்திற்கு தரப்பட்ட தலைப்பு வேறு, இங்கே பகிர்ந்து கொண்டிருக்கும் கருத்து வேறு. நன்றி, தமிழ் ப்ரியா 15-Feb-2017 5:40 pm
கவிஞனென்பவன் கமுதலில் ஒரு மனிதனென்பது ஞாபகமிருக்கட்டும். நன்றிகள் அன்பு சகோதர சகோதரிகளே. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். 15-Feb-2017 4:35 pm
ஆம் . கவிஞர்கள் கவிதையில் பெண்ணழகு பாராட்டுதல் இலக்கிய இனிமை. கவிப்பிரிய மித்திரனின் விமரிசனம் எனக்கு ஏற்புடையதில்லை . மீண்டும் நன்றி தமிழ் பிரியா . அன்புடன், கவின் சாரலன் 15-Feb-2017 3:49 pm
K Govindhan - vimaladhithan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2017 6:17 pm

திருமண டெகரேஷன் கம்பனிக்கு தமிழ் பெயர் வேண்டும்

மேலும்

கல்யாணவைபோகம் மாங்கல்யம் கரணம் வதுவை நன்மணம் மங்களம் 03-Feb-2017 6:32 pm
பந்தம் அல்ல்து - கெட்டிமேளம் (திருமண அலங்கார மையம் ) 03-Feb-2017 3:10 pm
திருமண அலங்காரகம் --- இந்தப் பெயரும் பொருத்தமாக இருக்கும். 03-Feb-2017 11:37 am
1 மண எழில் மேன்மையகம் 2 எழில் மண வடிவகம் 3 திருமணலங்கார் 4 நறுமணலங்கார் 5 மணப் பயிர் அலங்கார் 6 மண எழில் நிலையம் 7 திருமண எழிலகம் ----- இந்தப் பெயர் எனது மேற்கண்ட ஆறு பெயரையும் விட பொருத்தமாக இருக்கும்; எளிய பெயர்; படித்ததும் புரிந்து கொள்வர். 03-Feb-2017 11:34 am
K Govindhan - K Govindhan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 8:12 am

நாம் தமிழர்கள்
மார்தட்டி தைரியமாக சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
வந்தோரை வாழவைத்து சிறப்புடன் சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
புறமுதுகு கட்டாமல் நெஞ்சம் நமிர்த்தி சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
இருந்ததை எல்லாம் இரவோர்க்கு கொடுத்து
இருமாப்போடு சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
தரணியையே வென்றுவிட்ட போதிலும்
பணிவுடன் சொன்னோம்
நாம் தமிழர்கள் என்று..
பண்பாட்டிலே உயர்ந்த நாம்
அன்போடு உரைத்தோம்
நாம் தமிழர்கள் என்று..
காதலிலே ஒழுக்கத்தோடு இருந்து
பண்போடு உணர்த்தினோம்
நாம் தமிழர்கள் என்று..
ஒருவனுக்கு ஒருத்தியென இல்லறத்திற்கே
இலக்கணம் வகுத்துக் கூறினோம்
நாம் தமிழர்கள் என்று..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே