இனிமோ கடிச்சு கொதறவேண்டியதுதான்

தலைவரே
உலகத்திலேயே நன்றி
உள்ள விலங்கு நம்ம
இனந்தான். இந்த
மனுசங்க நாக்குல நரம்பு
இல்லாததால
எதுக்கெடுத்தாலும் "நன்றி
கெட்ட நாயி/நாயிங்க -
ன்னு நன்றி கெட்டதனமா
திட்டறாங்க. அத
தடுக்கறதுக்கு ஒரு வழியச்
சொல்லுங்க
இதயதெய்வமே.
😊😊😊😊😊😊
தோழர்களே, உங்க
வேதனை ஏன்னோட
வேதனை. உங்களுக்காக
நான்; உங்களில் ஒருவன்
நான்.
😊😊😊😊😊😊😊😊😊😊
அய்யோ தலைவரே, தர்ம
தொரையே 'தோழர்/
தோழர்கள்' -ங்கற
வார்த்தையா மனுசங்க
சொன்னா அவுங்கள
தீவிரவாதிங்க பட்டியல்ல
சேத்திடுவாங்களாம்.
நல்லவேளை நம்ம 'லொள்
லொள்' மொழியப்
புரிஞ்சுக்கற அளவுக்கு
உலகத்தில எந்த
மனுசனும் அறிவாளியா
இல்ல. மனுசங்க சிலருக்கு
தாய் மொழி மட்டும் தான்
தெரியும். சிலருக்கு ரண்டு
மூணு மொழிங்க தெரியும்.
எதோ நரசிம்மா ராவு,
பாரதியார் போன்ற ஒரு
சிலருக்குத் தான் பல
மொழிகள் தெரியும். நம்ம
இனத்தைச் சேந்த
எல்லாருக்கும் உலகத்தில
பேசப்படற எல்லா
மொழியோட தேவர்கள்,
அசுரர்கள், அரக்கர்கள்
பேசற மொழிகள்கூடப்
புரிஞ்சுக்க முடியும்.
மனுசங்க பட்டாசு
வெடிக்கற போது
நரகத்தில இருக்கற
நராகசுரன் "ஏந்தான் இந்த
புத்திகெட்ட மனுசங்க
சுத்தி இருக்கற
உயிரனங்களுக்கும்
இயற்கைக்கும் ஆபத்தான
இந்த வெடிங்கள எம்
பேரச் சொல்லி
வெடிக்கறாங்களோ
தெரில்ல.
ஆயிரக்கணக்கான
வருசத்துக்கு முன்னாடி
அழிஞ்சு போன நானு
இந்த மனுசங்களுக்கு
எப்படித் தெரியும்?
கெட்டதை மறக்கறது தான்
அறிவுடமை -ன்னு
தெரியாத மேதாவிகளும்
இருக்கறாங்களே. நான்
நரகத்திலேயே தவம்
செஞ்சு மறுபிறவி
எடுத்தாத்தான் அவுங்கள
திருத்த முடியும் -ன்னு
நினைக்கிறேன்" -ன்னு
நரகாசுரன் பேசறதத்தான்
நாம எல்லோரும் வெடி
எப்ப
வெடிச்சாலும் நம்ம காதில
கேக்குறமே.
@@@@
சரி அத விடுங்க
தோழர்களே. என்ன
எதுக்கு தர்ம தொரைன்னு
முன்பு ஒரு பேசின தோழர்
லொள்மாறன்
சொன்னாரு?
@@@@@@
அய்யா, எந்த
வீட்டுலயாவது
முக்கியமான விஷேசம்
நடந்தா மிச்சம் மீதி ஆகறத
தெருவில வாரிக்
கொட்டறாங்க.
நாங்கெல்லாம் அங்க
போனா பங்கு
போடறபோது
எங்களுக்குள்ள தகராறு
வந்து எல்லாம் ஒரே
சமயத்தில லோள் லொள்
போடுவோம்.
வேலைக்காரங்க எங்கள
அடிச்சு வெரட்டாவுங்க.
நீங்க தலைவர் ஆனதுக்கு
அப்பறந்தான் தமிழ்
நாட்டில ஏற்பட்ட மாணவர்
எழுச்சி உலகத்
தமிழர்களத் தட்டி எழுப்பி
ஓறுறுமை உணர்வை
ஏற்படுத்தின மாதிரி நம்ம
பகுதியைச் சேந்த நம்ம
தோழர்களை ஒற்றுமை
படுத்தீட்டிங்க அய்யா.
@@@@@
உங்க பாராட்டுக்கு
எனோட லொள்ளான
நன்றிகள்கோடி! தமிழ்
தாய் தந்தைக்கு பொறந்த
சாமிங்கற தலைவரு
அறவழில போராடுன
மாணவர்கள
பொறுக்கீங்கன்னு
சொன்னாராம்.
சென்னைல இருக்கற ஒரு
அம்மா என்னமோ
பீட்டாவோ
தோட்டாவோங்கற
அமைப்பில பெரும்
புள்ளியாம். அந்த அம்மா
பேரு என்னமோ ராஜன்னு
பேசீட்டாங்க நம்ம பகுதிப்
பசங்க. அந்த அமைப்போட
வேலை நம்ம நாட்டுல
இருக்ககுற வீட்டு
விலங்குகளோட
எண்ணிக்கையைக்
கொஞ்சங் கொஞ்சமா
ஒழிச்சுக் கட்டிட்டு
வெளிநாட்டு பெருந்தீனி
விலங்குகள நம்ம
நாட்டடில இறக்குமதி
செய்யறதுதானாம்.
நீங்களும்
பாத்திருப்பீங்களே இந்தத்
தெருவில கடசி வீட்டுல
ஒரு பணக்காரர் வீட்டுல
இருக்கற வெளிநாட்டு
நம்ம ஆசாமி
இருக்கறானே அவனப்
பாத்தீங்களா? ஒரு
கன்னுக்குட்டி மாதிரி
இருக்கறான். அந்த
வெளிநாட்டு பொறுக்கிப்
பையனுக்கு அவந் திங்கற
பெருந்தீனிக்கு ஒரு
நாளைக்கு செலவு
இருநூறு ரூபாயாம். ஒரு
வருசத்துக்கு மருத்துவச்
செலவு ஐயாயிரமாம். நம்ம
இனத்தையும் நம்ம
மண்ணின்மைந்தர்களான
வீட்டு விலங்குகளையும்
விவசாயத்தையும் அழிக்க
சில வெளிநாடுங்க
பெரிய சதி வேலையே
செய்யறாங்கனான்னு
படிக்கற தமிழ்ப்
பசங்க உலகமே
திரும்பிப் பாக்கற
அளவுக்கு போராட்டம்
நடத்தினத போன வாரம்
முழுவதும்
தொலைக்காட்சி செய்தில
கேட்டமே. அதே மாதிரி சில
வீடுங்கள்ல வளர்ற நம்ம
இன
லொள்லொள்ளார்களும்
அந்தச் செய்திங்கள
எல்லாம்சொன்னாங்களே.
😊😊😊😊😊
தலைவரே நம்ம இன
பச்சிளம் குட்டீங்க எல்லாம்
பசியோட பல இடங்கள்ல
சந்துலயும் பொந்துலயும்
இருப்பாங்க.
பிள்ளைங்களோட பசி
தாய்க்குத்தான் தெரியும்.
நம் இனத் தாய்மார்கள்
பிள்ளைங்களுக்கு
பாலூட்டற நேரம்
வந்திருச்சு. உங்க
கட்டளைய சீக்கிரம்
சொல்லுங்க தலைவரே.
☺☺☺☺😊😊😊😊😊😊
பல தாய்மார்களின்
உணர்வைப் புரியாம
அதிக நேரம்
எடுத்தமைக்காக
வருந்துகிறேன்.
இனிமே எந்த மனிதராவது
'நன்றி கெட்ட நாய்' -ங்கற
சொற்றொடரச் சொன்னா
நம்ம பகுதிக்கு
பக்கத்தில்உள்ள
பகுதிக்குள்ள அந்த
நன்றியில்லா நரன்
(=மனிதன்) நொழையற
போது அங்க இருக்கற
மண்ணின் மைந்தர்
ஒருவர் அந்த ஆளைக்
கடித்துக் குதற தகுந்த
ஏற்பாடு செய்யப்படும்.
அடுத்து நம் உறவுகள்
காவல் இல்லாத
வீடுகளுக்கு எந்நேரமும்
பாதுகாப்பு
வழங்கவேண்டியது
நம்முடைய பொறுப்பு.
அடுத்து நம்ம நாட்டு
மண்ணின்
மைந்தர்களான வீட்டு
விலங்குகளுக்கு எதிரா
செயல்படறவங்கள சமயம்
பார்த்து எங்காவது
கடத்தெருவுப்பக்கம் வந்தா
அந்தப் பகுதியில
இருக்கற நம்மின தோழர்
அல்லது தோழி ஒருவர்
அந்த ஆளுக்குத் தக்க
பாடம் புகட்ட சிறப்பான
ஏற்பாடு செய்யப்படும்.
நீங்கள் பட்டினி
கிடந்தாலும் வேறு எந்த
'அந்தரங்க' பிரச்சனை
என்றாலும் சண்டை
சச்சரவில் ஈடுபடக் கூடாது.
நம்மின தோழர்களும்
தோழிகளும் எந்த
நிலையிலும்
ஊளையிடக்கூடாது. நமது
ஊளை தெருக்களில்
மீதமான சோறு, இட்டிலி,
தோசை, பலவித
சாதம், பிரியாணி,
பலகார வகைகளைக்
கொட்டும் நல்ல மனம்
கொண்ட வள்ளல்களுக்கு
இடையூறாக இருக்கும்.
அவர்களில் யாராவது
ஒருவர் நகரசபை
ஆணையருக்கு தகவல்
கொடுத்தால் நம்மை
பிடித்துச் செல்ல
வண்டியையும்
ஆட்களையும் அனுப்பி
விடுவார்கள். அடுத்து,
படித்த மனிதர்களே மூட
நம்பிக்கைளில்
ஆழ்ந்தவர்களாக
இருக்கிறார்கள் என்பது
நாம் அறிந்ததே. அவர்கள்
நம்பிக்கைக்கும் நாம்
மரியாதை தர
கடமைப்பட்டுள்ளோம்.
இத்துடன் நம் பொதுக்குழு
கூட்டம் முடிகிறது. நன்றி.
வணக்கம்.
@@@@@
தலைவரே நாங்க இங்க
இருந்து போறதுக்கு
முன்னாடி உங்க கால்ல
விழுந்து வணங்கிட்டுப்
போறம்.
@@@@
நம் இனத்தை ஆதரிக்கற
தமிழ் மக்களைப் பாத்த
வாலாட்டறமே அதுவே
அவுங்க கால்ல விழுந்து
வணங்குவற்கும் நன்றி
சொல்லறதுக்கும் சமம்.
பெத்தவங்க, முதியோர்,
ஆசிரியர்கள் இவுங்கிட்ட
ஆசி வாங்கும போதும்,
இறைவனை
வணங்கும் போது
மட்டுந்தான் தலை
குனியணும். பல
மனிதர்கள்
சுயலாபத்துக்காக
கொத்தடிமைகள் மாதிரி
நடிக்கற பழக்கம் எல்லாம்
நம்ம இனத்துக்கு
வேண்டாம். நம்ம ஐந்தரை
அறிவு மனிதர்களின்
ஆறறிவுக்கு சமம்
என்பதை
மறந்துவிடாதீர்கள்
தோழர்களே, தோழியரே.
சென்று வருக. வணக்கம்.
@@@@@
வணக்கம் தலைவரே.
☺😊☺☺😊😊☺☺☺☺😊😊☺☺
வரை படம்: நன்றி-={ 'தி இந்து' --- எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் தொடர் கட்டுரை 'கடவுளின் நாக்கு' பகுதி 30 லிருந்து எடுத்த படம்.
31-01-2017.