கானல் பறவைகள்

கானல் பறவைகள்
அது ஒரு ஓடுகளற்ற தங்க முட்டை..
இளம் சூட்டில் நெஞ்சில் வைத்து அடைகாக்க பட்டது..
அழகாய் பிறந்தது அந்த குஞ்சு பறவை..
பிறந்ததும் முளைக்காத சிறகுகளுடன்
வானம் வரை பறந்தது..
பசிக்கும் போது விண்மீனை கொத்தி தின்றது...
காக்கைகும்,
கழுகுக்கும் சிக்காத குஞ்சு பறவை..
தாய் பறவை காலில் மிதிபட்டு
இறந்து போனது
இப்படி தான் நிறைய காதல்கள்.
என்றும் உன் காதலுடன்
சிலம்பரசன்