வீறுகொண்டு விரைந்து வா எம் காளையே
வேண்டும் வேண்டும் வேண்டும் என்று எம் காளையர்கள் துள்ளிட,
மீண்டு வந்த தேசம் போல பெருமிதம் நான் கொள்கிறேன்.
வங்கக்கடலும் பொங்கி வரும் உன் வரவு தனை நோக்கிட,
சிங்கமென எம் காளையர்கள் உனை மீட்டெடுக்க துள்ளிட.
சங்கம் வளர்த்த மாநகர் மாமதுரை தேடிட,
சைலமது பேரெடுத்த மாங்கனி மாநகரும் நோக்கிட,
குமரி கடல் பொங்கு நகர் உன் வரவு தனை பார்த்திட,
மதராசன் மன்னர்களும் உனை காக்க திரண்டு வர,
கன்னியரும் காளையரும் உன் ஒருவனுக்கே திரண்டனர்.
கண்ணியத்தின் பெயர் சொல்ல உலகுக்கே உணர்த்தினர்
பிள்ளையென நீ வளர்த்த எம் மண்ணும் உனை காக்குமே
என் பாட்டனுக்கு சோறிட்ட உன் பாசம் உள்ளம் மறக்குமோ.
பஞ்சம் வந்து பட்டினிப் பேய் பிடித்திலுத்த போதுமே,
நீ ஏற்பிடித்து இழுத்த அழகு மறவாது தமிழ்மனம்.
வண்டி பூட்டி உன் உறவும் சுமந்த தேசம் இதுவடா
காங்கேயன் நீ வரவே வாடி வாசல் திறக்குமடா
துள்ளிக்கொண்டு வரும் அழகு என் ஈசன் கொண்ட அழகடா
வீரம் கொண்டு சீறிப் பாயும் தமிழன் வீரம் வாழவே
வீறுகொண்டு எழுந்து வா பாய்ந்து நீயும் விளையாடி வா
தமிழன் பெயர் சொல்லவே விரைந்து வாடி வாசல் தேடி வா.

