காதலும் கடந்து மணம் விரும்பா திருமணம்

சிறகடித்து பறந்த காலம் கடந்து
சிறகுடைந்து சிறை காலம் அடைவோமே
காதல் வந்து சேரும் வரை
சுதந்திரம் இங்கே...
காதல் வந்து சேர்ந்த போது
சுதந்திரம் எங்கே...
மாற்றங்கள் கோடி எம்மில் வந்தும்
மணம் விரும்பும் திருமணம் குறைவுதான்...
ஜாதி மதம்,பெற்றார்,உறவினர் என்றெல்லாம்
மணம் விரும்பா மாங்கல்யம்
ஏற்கும் நிலைதான் இன்னும் பெண்களுக்கு...
மணம் விரும்பா திருமணம் என்று
வாழ்க்கை முழுவதுமாய் அவள் நினைவுதான் ஆணகளுக்கு....