ஹைக்கூ முயற்சி 5

வற்றாது பொழியும்
கறுத்த இசைமுகில்
இளையராஜா...!

எவ்வுந்தும் மகிழுந்தே
ராஜாவின் ராகத்தென்றல்
ரம்மியமாய் தீண்டும்போது...!

பாதிக்கோப்பை நிரம்பிய
வெண்ணுரை மது
அரை நிலா...!

தளிர்மங்கை தீண்டல் தீர்ந்ததும்
தாவி தழுவிக் கொண்டாள்
குளிர் மங்கை...!

தூரிகை துடிக்கிறது
காரிகையவள் முகம் வரைய
ஓவியனில்லையே நான்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (3-Feb-17, 10:33 am)
பார்வை : 174

மேலே