உறவுகள்

இயந்திர மாயமாய்
இயங்கி வரும்
இந்நாளில்
உறவுகளுக்காக
ஏங்கி தவிக்கும்
மனித மனங்கள் !!!
பாராட்டி சீராட்ட பாட்டி
பாரம்பரியத்தை பரிந்துரைக்க பாட்டன் !!!
அன்பை ஊட்ட அம்மா
ஆசையாய் கொஞ்ச அப்பா
சீர் வாங்க அத்தை, மாமன்
விடுமுறையை கழிக்க
பெரியம்மா, சித்தி
அரவணைக்க அண்ணன்
அழகுபடுத்த அக்கா
கொஞ்சி விளையாட
குட்டி தங்கை
செல்லமாய் சண்டையிட
ஆசையாய் ஒரு தம்பி
வேண்டும் evaiyanaithum
எனக்கு மறுபிறவி
என ஒன்றிருந்தால் !!!