இணைந்தும் இணையாமலும்
இணைந்தும் இணையாமலும்
இல்பொருளாய் இருப்பதற்கு
கணையாழி கொண்டுநாமும்
காதலிப்போம் இனிஇங்கே .
தண்டவாள வாழ்க்கைக்கு
தரமான நம்காதல்
செண்டாடும் சிறப்பாக .
செம்மையுறும் கற்புநெறி .
காதலிலே இணைந்தாலே
கல்யாண மேளதாளம்
மோதலின்றி நடந்தேறும் .
மொத்தமாக இணைவோமே !
திருமணமும் முடிந்தவுடன்
தீண்டிடுவாய் எனையும்நீ.
மருவுவாய் மாறிநானும்
மனையாளாய் காத்திருப்பேன் .
உடலின்பக் கவர்ச்சியிலே
உள்ளங்கள் புணராமல்
கடலின்பக் கனவுகளில்
காவியமும் படைப்பதெப்போ !!
உள்ளங்கள் புணர்ந்தாலே
உடலினையும் பார்ப்பதில்லை .
உண்மையானக் காதலிலே
உணர்வோமே எந்நாளும் !!!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்