உண்மை சொல்
இடைவெளிகள் குறைந்திடவே
இடையிடையே நெருங்குகிறேன்!
மழை வருமா??
நனைத்திடுமா?? - ஒரு குடையில்
இணைவோமா??
மௌனம் கலைந்திடவே
மெல்லிசையில் உருகுகிறேன்!
பதில் வருமா??
சுகம் தருமா?? - இனி யாவும்
நலம் பெறுமா??
இருவரிக் குறள்போல் - உன்
இதழ்களில் ஆயிரம் கவிதைகள்!!
பூவிதழ் மேனியால்,
என்
கற்பனை எல்லையும் தகர்ந்ததோ??
காரிருள் மேகங்கள்
மழை மறந்து திரும்புவதோ??
நிறைமாத சிசுவை மறைத்து
நரபலிக்கு அனுப்புவதோ?? - ஒரு சொல்
உண்மை சொல்!!